பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் மேற்கோள்தான் இவருக்கு ஆதாரம். சிட்டி ' விமர்சனம்' என்று எழுதியதை இவர் 'மதிப்புரை ' என்று மாற்றியுள்ள தோடு, "தேசிகன் கூட' என்று 'கூட' என்ற அடைமொழியைச் சேர்த்து; தாம் கூற வந்ததை மேலும் அழுத்தமாகக் கூறியுள்ளார் என்பதுதான் வித்தியாசம், மேலும், 'மூலத்தைக்கூடக் குறிப்பிட்டிருந்தார்' என்றும் சிட்டி கூறாத வாசகத்தைத் தாமாகவே சேர்த்து மேலும், அழுத்தம் கொடுத்திருந்த வேதசகாயகுமார், ஆல்டஸ் ஹக்ஸ்லியின் அந்த மூலக்கதை எது என்ற தேவையான விவரத்தை மட்டும். தெரிவிக்காமலே விட்டுவிட்டார். ஏனெனில் அது அவருக்குத் தெரியாது என்பதே உண்மை நிலை இவ்வாறு எழுதிவிட்டு ஆனால் இதை வைத்து அவரை (புதுமைப்பித்தன்) மதிப்பிட யாரும் முனையவில்லை' என்று அடுத்த வரியில் சப்பைக்கட்டு வேறு.கட்டியுள்ளார்! சரி. சிட்டி மேற்கண்டவாறு எழுதியதற்கு ஆதாரம் என்ன? தமது நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ள 'குறிப்புகள்' என்ற பகுதியில், 'ராமையா பி.எஸ்.- மணிக்கொடிகாலம்' என்று அந்நூலின் பக்க எண்ணைக்கூடக் குறிப்பிடாமல் ஆதாரம் காட்டியுள்ளார், உண்மையில் பி.எஸ். ராமையாவின் ‘மணிக்கொடி காலம்' என்ற நூலில் அவர் எழுதியிருந்தது என்ன? அது பின் வருமாறு: 'ஒரு நாள் மாலையில் நானும் புதுமைப்பித்தனும் செம்புதாஸ் தெருவழியாகச் செல்லும்போது, அந்தத் தெருவைக் குறுகிகில் வெட்டிக் கொண்டு செல்லும் ஜோன்ஸ் தெரு அல்லது டூம்ஸ் தெரு முனையில் கண்ட ஒரு காட்சியும் இரண்டு கதைகளுக்குப் பொருளாக அமைந்தது, 'புதுமைப் பித்தன் 'கவந்தனும் காமனும்' என்ற கதையை எழுதினார். அது வாரப்பதிப்பில் வெளிவந்தது. 'நான் 'கார்னிவல்' என்ற தலைப்பில் எழுதியது கதைப் பதிப்பில் வெளிவந்தது. 'பின்னால் ஒரு கதைத் தொகுப்பில் 'கவந்தனும் காமனும் வெளிவந்தது. அந்த நூலுக்கு மதிப்புரை எழுதிய ரா.ஸ்ரீ. தேசிகன் அந்தக் கதை ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ஒரு ஆங்கிலக் கதையின் தழுவல்தான் என்று ஹிந்து பத்திரிகையில் எழுதியிருந்தார். - 'அதைப்படிக்க எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தக்கதை பிறப்பதற்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சி, அதை நேரில் கண்ட