பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

புதுமைப்பித்தன் கதைகள்



வேறு எதுவும் அறியாமல், உடலுறவு பற்றிய எண்ணமோ, உணர்ச்சியோ சற்றேனும் இல்லாமல், தன் நினைவில்லாமலே தான் வழக்கமாக ஆபீசுக்குச் சென்று திரும்பவும் அதே தெரு வழியாகத் தான் வருகிறான்; அந்தத் தெருவுக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் வரவில்லை. வந்த இடத்தில் அந்தச் சந்து முனை விலைமகள் அவன் கையைப் பிடித்து இழுக்கிறாள். ஏன் இழுக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட அவன், அவளிடமிருந்து தட்பிப்பதற்கு ' வேறு வழி தெரியாமல், மடியிலிருந்த சில்லறையையெல்லாம் அவள் கையில் திணித்துவிட்டு, அவளை நெட்டித்தள்ளிவிட்டு ஓடி விடுகிறான். அந்த விலைமகளோ, ‘காரியம் பண்ணாவிட்டாலும்' காசைக் கொடுத்துவிட்டுப் போ' என்று தன் வீட்டுக்கு வந்த வாலிபனிடமிருந்து பணத்தைப் பறித்துக் கொண்ட ஹக்ஸ்லி கதையின் விலைமகள் போலல்லாமல், 'பேடிப்பயலே; என்னை என்ன பிச்சைக்காரியென்றா நினைத்துக் கொண்டாய்?'. என்று கூறிவிட்டு, அவன் கையில் திணித்த காசுகளை லிட்டெறிகிறாள். வறுமை காரணமாகத் தன் உடலை வாடகைக்கு விட்டேனும் ஜீவனம் நடத்த அவள் விரும்பினாளே ஒழிய, பிச்சை ஏற்க அவள் தயாராக இல்லை. இதன் மூலம் உடலை விற்றுப் பிழைக்கும் விலைமகளுக்குக் கூட மான உணர்ச்சி உண்டு என்ற கருத்தைப் புதுமைப்பித்தன் வலியுறுத்துகிறார். என்றாலும் அவளுக்கும் வயிறும் பசியும் இருக்கின்றனவே. எனவே 'பேடிப்பயல்' பேமானி!' என்று முறு முறுத்துக் கொண்டே, விட்டெறிந்த சில்லறையை இருட்டில் தேடுகிறாள். ஆனால் அவை கிடைக்கவில்லை என்பதை, 'ஆனால் அவனும் பட்டினி என்று இவளுக்குத் தெரியாது' என்று கூறுவதன் மூலம், இருவரது பரிதாபகரமான் - நிலையையும் நமக்கு உணர்த்திவிடுகிறார். புதுமைப்பித்தன் உண்மையில் காம உணர்ச்சியையே அற்றுப் போகச் செய்யும் பசியையும், பசியைத் தீர்க்க காம உணர்ச்சியிடமே உடலை அடகுவைக்க முனையும் பரிதாப நிலையையும் உணர்த்தும் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டவே - தமது கதைக்குக் 'கவந்தனும் காமனும்' என்று தலைப்பிட்டிருக்கிறார். இந்தக் கதையை ஹக்ஸ்லி கதையின் அப்பட்டமான திருட்டு அல்லது தழுவல் என்று எப்படிக் கூற முடியும்? இது தேசிகனுக்குத் தெரியாதா? தெரிந்தும், புதுமைப்பித்தன் இறந்து ஓராண்டுக்கும் மேலான பின்னர், இந்தக் குற்றச்சாட்டைத் தட்டிக் கேட்கத்தான் புதுமைப்பித்தன் உயிரோடில்லையே என்ற தைர்யத்தில், 1949இல்