பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

புதுமைப்பித்தன் கதைகள்



மைனர் காரைவிட்டு இறங்கி, 'என்னடா கூட்டம், ரோட்டை அடைத்துக் கொண்டு!' என்று அதிகார தோரணையோடு அதட்டிக் கொண்டே, கூட்டத்தின் பக்கம் சென்றார். இனி வனஜாவின் கூற்றின் மூலமாகவே அந்தக் காட்சியைக் காண்போம். வனஜா இவ்வாறு கூறுகிறாள்: - ' - 'கூட்டத்தின் நடுவில் ஒரு பெண். என் வயதுதான் இருக்கும். பதினெட்டிலிருந்து இருபதுக்குள். நிறத்தில் கறுப்பு, சாதாரணமான ஒரு மலிவுச் சேலைதான் கட்டியிருந்தாள். கழுத்தில் ஒரு கண்ணாடி மணிமாலை. அவளுடைய உருவம் இளமையில் சரியான ஊட்டமில்லாததாலோ அல்லது வேறு காரணத்தாலோ வெம்பிப் போனதுபோலத் தோன்றியது. -- 'கூட்டத்துடன் முன்னேறி வந்த அந்தப் பெண் அவர் எதிரில் வந்து நின்று, 'பாருங்க சாமி. இவன் எட்டணாக் கொடுக்கிறேன்னு என்னோடே பேசிட்டு, இப்போ பாருங்க சாமி, கொடுக்க மாட்டேங்கிறான். ஆம்பளையைப் பாரு தூ!' என்று வாயிலிருந்து எச்சில் தெறிக்க. அந்த மனிதன் பக்கம் பார்த்துக் கூவினாள். அதற்குமேல் அவள் பேசியதையெல்லாம்..... என் கை கூசுகிறது. 'அவள் என்னுடைய ஒரு தொழில் சகோதரி. ஆம் ஒரு வேசிதான்! - 'நான் ஒரு மாளிகையில் வீணை முதலிய ஆடம்பரங்களுடன் தொழில் நடத்துகிறேன். செல்வந்தர்கள் மைனர்கள் தாமாக என்னைத் தேடி வந்து செல்வத்தைக் கொட்டிக் கொடுத்துச் சுகத்தைத் தேட முயலுகிறார்கள். அவள் அங்கே அந்தக் குறுகிய சந்தில் ஒரு திண்ணையின் மறைவில் நின்று - உயிரைப் பிடித்து நிறுத்த முயலுகிறாள். அவளைத் தேடி வருகிறவர்கள் அவளுக்குரிய, பேசிய கூலியைக் கூடக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டுப் போய்விட முயல்கிறார்கள்......' : காரிலிருந்த வனஜாவின் இதயம் தன் தொழில் சகோதரியின் நிலையைக் கண்டு கழிவிரக்கம் கொண்ட வேளையில், மைனர் அப்பெண் சுட்டிக்காட்டிய நபரை மிரட்டி, 'நாயே! அவள் பணத்தைக் கொடு' என்று அதட்டுகிறார். இதற்குள் கூட்டத்தின் ஒரு கோடியிலிருந்து போலீஸ்காரங்க வாராங்க' என்று ஒரு குரல் எழுந்தது. உடனே அந்த நபர். ஒரு நாணயத்தை அவளிடம் விட்டெறிந்துவிட்டு நழுவி விடுகிறான். அவளும் அவசரத்தோடு