பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

புதுமைப்பித்தன் கதைகள்



அந்தக் காட்சியை வனஜாவின் வாய்மொழியாகவே காண்போம், 'அவளது கூந்தல் சீர்படுத்தப்பட்டிருந்தது. முகத்தில் அவள் புதிதாக அப்பியிருந்த மாவு பளிச்சென்று தெரிந்தது. அவ்வளவு தூரத்தில் இருந்தும் அவள் அணிந்திருந்த பழைய பூச்செண்டு ஒய்யாரம் காட்டியது. நான் முதலில் பார்த்தபோது. அவள் தனியாகத்தான் நின்றிருந்தாள். அடுத்த நிமிஷம் யாரோ ஒருவன் அவளிடம் வந்து நின்று பேசினான். அவள் கையை நீட்டினாள். வெள்ளி நாணயங்கள் இரண்டு மோதிய கலீரென்ற ஒலி என் காதுகளுக்கு எட்டியது......' இந்த அனுபவங்களின் மூலம் அந்த மைனர் தமது காமவேட்கையின் சுருதியைக் கூட்டிக் கொள்வதற்காகத்தான் தன்னை லீணை வாசிக்கச் சொன்னார், தன்னைக் கார்னிவல் கூத்துக்களுக்கு அழைத்துச் சென்றார், அதன்பின் மதுவையும் அருந்தி இளம் போதையை ஏற்றிக் கொண்டுதான் தன்னைப் படுக்கைக்கு அழைத்தார் என்ற உண்மை, தன்னையும் அவர் தமக்குக் காமசுகம்தரும் வேசியாகவே, கருவியாகவே மதித்திருக்கிறார் என்ற கசப்பான உண்மை அவளுக்குப் புலப்பட்டுவிட்டது. தூக்கத்திலிருந்து விழித்த மைனர் 'வனீ!' என்று கூப்பிடுகிறார். 'இதேர் வந்தேன்' என்று கூறிக்கொண்டே வனஜா உள்ளே திரும்புகிறாள். . 'ஆனால், ஐயோ! அந்தச் சொல்லில் இருந்த கசப்பு! அவருடைய மோகவெறியின் உச்சஸ்தாயியைக் காட்டும் ஸ்வரஸ்தானமாகிய அந்தச் சொல்லிலிருந்த அந்தக் கசப்பை நான் எப்படிச் சொற்களால் காட்ட முடியும்? 'இருபது வருஷமாகியும் அன்று என் நெஞ்சில் நிறைந்த அந்தக் கசப்பு இன்னும் மாறவில்லையே!' என்ற வனஜாவின் கூற்றோடு முடிகிறது ராமையாவின் கதை, . முப்பதுகளில் மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளையும், இவற்றைத் தொடர்ந்து வெளிவந்த தமிழ்ச்சிறுகதை ஆசிரியர்கள் சிலரது கதைத் தொகுதிகளையும் தேசிகன் படித்திருந்தார். என்பது, அவரது கைக்குக் கிடைத்த கதைகளில் அழகாய் அமைந்த சிலவற்றை', புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதிக்கு அவர் எழுதியுள்ள முன்னுரையில் பட்டியல் போட்டுக் காட்டியிருப்பதன் மூலம் தெளிவாகிறது. எனவே அவர்