பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.சி. ரகுநாதன்

57



'ஸ்ரீனிவாசனுக்குக் கலியாணமானது நினைவில் இல்லை, ஏன் என்றால் அது பெப்பர்மின்ட் கலியாணம்' என்று நெஞ்சில் உறைக்கிற மாதிரி கூறியவாறுதான் அவர் கதையைத் தொடங்கியுள்ளார். இதேபோல் ‘துன்பக்கேணி', கதையில் தேயிலைத் தோட்டத்து 'வெள்ளை முதலாளிகளுக்கு, தோட்டக்கூலிப் பெண்களை 'ஏற்பாடு: செய்து கொடுக்கும் 'ஸ்டோர் மானேஜரைப் பற்றிக் கூற வரும்போது, . அவர் 'கண்ணப்ப நாயனார் ரகத்தைச் சேர்ந்த பேர்வழி. தனது இஷ்ட - தெய்வத்திற்குத் தான் ருசி பார்த்துத்தான் சமர்ப்பிப்பார்' என்று கூறுவதன் மூலம், ஸ்டோர் மானேஜரின் யோக்கியதையைச் சட்டென்று புரிகிறமாதிரி கூறிவிடுகிறார். இதேபோல், 'ஒரு நாள்.. கழிந்தது' என்ற கதையில், சென்னையில் 'ஒட்டுக் குடித்தனம்', என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன் குடியிருக்க வருகிறவர்கள் எல்லோரும் ‘திருக்கழுக் குன்றத்துக் கழுகு' என்று நினைத்துக் கொள்வானோ என்னவோ? என்று புதுமைப்பித்தன் எழுதுகிறார். எங்கிருந்து வந்தது, பிறகு எங்கே சென்றது என்ற சுவடே தெரியாமல், சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும் வந்து தலைகாட்டிவிட்டு மறையும் திருக்கழுக்குன்றத்துக் கழுகை உவமித்து, அவர் ஒட்டுக்குடித்தனத்தில் அடங்கியுள்ள உபத்திரவங்களையெல்லாம்' ஒரே வரியில் தொட்டுக்காட்டி விடுகிறார்.. - புதுமைப்பித்தனின் கதைகள் எல்லாமே இத்தகைய தவளைப் பாய்ச்சல் நடையிலேயே இருந்தன என்று சொல்ல முடியாது. கவிதையின் உள்ளடக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ப எவ்வாறு தாளலயமும் சொல்லாட்சியும் மாறுகின்றனவோ, அதே போல் புதுமைப்பித்தனின் கதைகளிலும் கதையின்: காலத்துக்கும் கருப்பொருளுக்கும் ஏற்ப: அவரது : உரைநடைமாறும்; பெரும்பாலோர் . - சமூகக்கதை எழுதினாலும் சரித்திரக்கதை. எழுதினாலும், காதல் கதை எழுதினாலும் , கையறுநிலைச் சூழ்நிலை பற்றிக் கதை எழுதினாலும், தம்புராவைப் போல் ஒரே சுருதியில், ஒரே விதமான நடையிலேயே எழுதிச் செல்வர். ஆனால் புதுமைப்பித்தன் கதைகளில் அவரது உரைநடை ஒரே சுருதியில் பேசிக் கொண்டிருக்காது கதையின் கரு, காலம், பாத்திரம் ஆகியவற்றுக்கேற்ப அவரது உரைநடையின் சுதியும் கதியும் மாறிக் கொண்டேயிருக்கும். - - உதாரணமாக, திருநெல்வேலி வட்டார வாழ்க்கையைப் பற்றிய: கதை என்றால், 'மேலச்செவல் வைர்வன் பிள்ளை என்ற