பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் 53 'பதினோராவது ரீங்காரம் ஓய்வில்லை' 'எங்கோ கதவு, கிரீச்சிட்டது'. 'திடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து பிறாண்டிக் கொண்டு நழுவின. - 'நான் உதறியடித்துக் கொண்டு எழுந்தேன். நல்ல காலம்; வாய் உளறவில்லை . 'என் மனைவியின் கைதான் அசப்பில் விழுந்து கிடந்தது. அவளுடையது தானா? 'எழுந்து குனிந்து - கவனித்தேன், நிதானமாகச் சுவாசம் - விட்டுக்கொண்டு தூங்கினாள். 'கீழே சென்று பார்க்க ஆவல்; ஆனால் பயம், 'போனேன். மெதுவாக கால் ஓசைப்படாமல் இறங்கினேன். 'ஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது. மேற்கண்ட மேற்கோளை எடுத்தெழுதிவிட்டு, தேசிகன் பின்வருமாறு எழுதுகிறார். 'எட்கார் ஆலன் போவைப்போல் இவரும் ஒரு சூழ்நிலையைச் சித்திரிப்பது இங்கு நோக்கத்தகுந்தது. தமிழிலேயே ஊறின ஓர் ஆசிரியன் இம்மாதிரி எழுத முடியாதென்பது உண்மையே. ஆனால் ஆங்கிலத்தில் தோய்ந்தவர்களுக்கு இம்முறை புதியதன்று' என்று எழுதியுள்ளார். . புதுமைப்பித்தனின் பிற கதைகள் சிலவற்றின்மீது இதற்கு முன்பே மறைமுகமாகவும் நேர்முகமாகவும் - தழுவல் முத்திரை குத்த முயன்ற தேசிகன், இங்கும் 'காஞ்சனை' கதை எட்கார் ஆலன் போவின் கதை ஒன்றின் தழுவலாக இருக்குமோ, அல்லது போவின் தாக்கத்தால் எழுதப்பட்ட கதையாக இருக்குமோ என்ற எண்ணத்தை வாசகர் மனத்தில் உருவாக்க முயன்றுள்ளாரோ என்ற நியாயமான சந்தேகம் நமக்கும் எழத்தான் செய்கிறது. இதுவும் மிகமிக நாசூக்கான. விஷமத்தனம் என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது. மேலே கண்ட மேற்கோளில் ஆங்கிலவாடை எங்கே வீசுகிறது என்று நமக்குத் தெரியவில்லை. வேண்டுமானால், அந்த மேற்கோளில் - 'கிரீச்சிட்டது. - என்ற சொல் தமிழ்மரபுக்கு அன்னியமானது, 'கிரீச்சென்று சத்தமிட்டது' என்று எழுதுவதுதானே தமிழ்மரபு என்று கூறத் தோன்றலாம். ஆனால், உதாரணமாக, முத்தம்