பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் : 65. தேசிகன் - கூறியுள்ளதுபோல் புதுமைப்பித்தன். 'ஆங்கில் இலக்கியத்தில் எப்படி மூழ்கியிருக்கிறார்' என்பதை மேற்கண்ட - மேற்கோள் வரிகள் எவ்வாறு 'முரசடிக்கின்றன' என்று நமக்குப் புரியவில்லை . . தேசிகன் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ள 'பாரிசம்' என்ற சொல் ஒன்றும் தமிழ் வழக்குக்குப் புதியதல்ல. உடம்பின் ஒரு பக்கத்தை மட்டும் பாதிக்கும் பக்கவாதத்தைப் பாரிச.வர்தம்' என்று குறிப்பிடுவது. திருநெல்வேலி தமிழ் வழக்கு. அதேபோல் எலும்பின் மஜ்ஜையைக் குருத்து என்று சொல்வதும் தமிழ் வழக்குத்தான். 'ஐஸ்' என்ற சொல்லும், அதனை அறிந்த காரணத்தால் தமிழ் வழக்கில் பயிலப்படும் சொல்தான். ஏனைய வாக்கியங்களும் ஆங்கில இலக்கியத்தில் - 'மூழ்கியதன் விளைவாகவே உருவானவை.' என்று கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அவை சில உணர்வுகளை அல்லது நிகழ்வுகளைப் புதுமைப்பித்தன் எப்படித் திறம்படத் தமிழில் ' பிரதிபலித்துக் காட்டுகிறார் என்பதையே புலப்படுத்து கின்றன - எனலாம். - - -- தேசிகன் மேற்கூறியவாறு எழுதிவிட்டு, தாம் எழுதியுள்ளதைத் - தாமே மறுப்பதுபோல், இவ்வாறும் எழுதியுள்ளார்: 'இச்சுருதியில் செல்லுகிற சொற்களின் அமைப்பாலும், வளத்தாலும் தமிழ்மொழி சிறப்புற்றதை நாம் உணர்கின்றோம்.' - மேற்கண்டவாறு - புதுமைப்பித்தனின் , உரைநடையில் மறைமுகமாகக் குறைகளைக் காண முயன்ற தேசிகன், இதன் பின் நேர்முகமாகவே குறைகளைச் சுட்டிக்காட்டவும் துணிந்துவிடுகிறார். 'இவ்வாசிரியர் உருவக நடையிலும், உவமை மண்டிக்கிடக்கும் 'நடையிலும் திளைக்கின்றதை நாம் மறக்கமுடியுமோ?' என்று தொடங்கிப் பின்வருமாறு எழுதுகிறார்: - - - - 'உதாரணமாக: 'பிரமநாயகம் பிள்ளை , தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காண முடியாத பாலைவனத்தைப் பாசனம். செய்ய; தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கின்றார்.'

'இந்த வாக்கியம் சற்றுச் சுற்றலாய் அமையப் பெற்ற வவாக்கியமென்பதில் யாதொரு ஐயமுமில்லை, இது நடைக்கு ஒரு வனப்பைத் தருமா? - உன்னிப் பாருங்கள்.'