பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 புதுமைப்பித்தன் கதைகள் அதாவது இத்தகைய வாக்கியங்கள் உரைநடைக்கு ஒருவனப்பைத் தருவதில்லை என்பதே தேசிகனின் கருத்தாகும் என்பது தெளிவு. ஆனால் உண்மை என்ன? தேசிகன் மேற்கோள் காட்டியுள்ள வாக்கியம், புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்' கதையில் வரும் வாக்கியம் என்றாலும் அது முழுவாக்கியமல்ல; பாதி வாக்கியம் தான். பிரமநாயகம் பிள்ளை வேலை பார்க்கும் கடை முதலாளியிடம், சம்பளத் தேதி என்று குறிப்பிட்ட ஒரு தேதியில் சம்பளத்தை முழுமையாகப் பெறாமல், தமது தேவைகளை அன்றாடம் அவரிடம் கூறி நச்சரித்து அவ்வப்போது தவணை முறையிலேயே சிறுகச் சிறுகப் பெற்று வந்தார். இந்த விவரங்களைக் கூறி வரும் புதுமைப்பித்தன் பாராவின் இறுதியில் இவ்வாறு எழுதுகிறார்: 'இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்கு எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன், பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.' இதுதான் அந்த வாக்கியத்தின் முழு வடிவம். கதைத் தொடர்ச்சியோடு மேற்கண்ட வாக்கியத்தையும் சேர்த்துப் படிக்கும்போது, புதுமைப்பித்தன் கையாண்டுள்ள உருவகமும் 'உவமையும் அர்த்தபுஷ்டிமிக்க ஒரு புதிய வனப்பை நடைக்கு வழங்குகின்றனவேயன்றி; தேசிகள் கருதுவது போல் வனப்பைத் தராது போய்விடவில்லை என்பதை உணரலாம். இதன் பின் - கதையின் பெயரையும், சந்தர்ப்பத்தையும் குறிப்பிடாமல் 'சாபவிமோசனம்' கதையிலிருந்து பின்வரும் 'வரிகளை மேற்கோள் காட்டுகிறார்: வலுவற்ற வனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய சிந்தனைக் கோயில் போல், திடமற்றவர்களின் கால்களுக்குள் அடைபடாதகைலயங்கிரியைப் பனிச்சிகரங்களின்மேல் நின்று தரிசித்தார்கள். - 'தமது துன்பச் - சுமையான நம்பிக்கை - வறட்சியை ' உருவகப்படுத்தின பாலையைத் தாண்டினார்கள்.