பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் பா சோகக்கனலை எழுப்புகிறது என்று எழுதவந்த தேசிகன், தமது மேற்கண்ட வாக்கியத்திலேயே பன்மை ஒருமை மயக்கம் இடம் பெற்றிருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டார் போலும்! 'வழுக்கள்' என்ற பன்மைச் சொல்லைப் பயன்படுத்தியபின் அவர் 'அது எழுப்பும்' என்று எழுதுவது இலக்கணப்படி எவ்வாறு சரியாகும்? 'அவை எழுப்பும்' என்றல்லவா அவர் எழுதியிருக்க வேண்டும்! எனவே 'சொ.வி.யின் உரைநடை' என்ற கட்டுரையைத் தாம் எழுத முனையும்போதே, அவரது உரைநடையில் என்னென்ன குறைகளையும் குற்றங்களையும் காணலாம் ' என்ற. நோக்கத்துடனேயே தேசிகன் அதனை எழுதியுள்ளார் என்பது தெளிவு. இதன் மூலம் 1940 இல் அவர் தொடக்கிவைத்த விஷமத்தனத்தை. . 1959 இல் கூட அவருக்குக் கைவிட மனமிருக்கவில்லை என்பதே நமக்குப் புலனாகின்றது. புதுமைப்பித்தன் மீது தேசிகனுக்கு இத்தனை காழ்ப்புணர்ச்சி குடி கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன? 1940 இல் 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற தொகுதிக்குத் தேசிகன் முன்னுரை எழுதிய காலத்துக்கு முன்பே, 1937 ஏப்ரல் மாதம் தொடங்கி, ராமையா காலத்து மணிக்கொடிப் பத்திரிகையில் 'யாத்ரா மார்க்கம்' என்ற தலைப்பில், 'இலக்கியத்தில் தழுவல் செய்யலாமா, கூடாதா என்ற விவாதம்' மாதக்கணக்காக நடைபெற்று வந்த காலத்தில் 1937 நவம்பர் 15 இதழில், கி.ரா. என்ற கி. ராமச்சந்திரன் ரா.ஸ்ரீ.தேசிகனின் 'குழந்தை ராமு' என்ற நூல் உட்பட, மூன்று நூல்களுக்கு மதிப்புரை எழுதியிருந்தார். அதில் தேசிகனின் நூலைப்பற்றி எழுதும்போது, அவர் 'குழந்தை ராமுவில் நாடகம் துளிக்கூட இல்லை. அதில் ஒன்றுமே நடக்கவில்லை' என்று எழுதியிருந்தார் (மணிக் கொடி காலம் - பி.எஸ். ராமையா, பக். 346) இதனை அடுத்து, புதுமைப்பித்தன் , சந்தேகத் தெளிவு என்ற தலைப்பில் , தழுவல் பிரச்சினை சம்பந்தமாகத் தமது கருத்துகளை மேலும் முன் வைத்தபோது, கி.ரா. மதிப்புரை எழுதியுள்ள நூல்களைத் தாமும் படித்திருப்பதாகக் குறிப்பிட்டு, தேசிகனின் நூலைப் பற்றித் தமக்கே உரிய பாணியில் பின்வருமாறு எழுதியிருந்தார்: 'அதன் ஆசிரியர் ஸ்ரீதேசிகன் ஒரு எம்.ஏ. பிரஸ்தாபப் புஸ்தகத்தின் கட்டுக்கோப்பும் அமைப்பும் ஆசிரியரே தமக்கிருக்கும் உயர்தரக் கல்விப் பாண்டித்தியத்தால் வெறும் சோடை என்று தெரிந்து