பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 புதுமைப்பித்தன் கதைகள் கொள்ளக்கூடியது. இருந்தும் பிரசுரிக்கத் தகுதி உடையது என்று அவர் கருதி இருப்பதால், நாம் வேறு என்ன முடிவிற்கு வருவது?' (மேற்கோள் சி.சு. செல்லப்பாவின் நமது இலக்கியத் தேட்டம் (5). தீபம்; செப்டம்பர் 1986 இதழ்). இவ்வாறு புதுமைப்பித்தன் தமது நூலைச் சோடை' என்று தாக்கி எழுதிவிட்டார் என்ற கோபத்தினால்தான், தேசிகன் 1940 தொடங்கி 1959 வரை, கிட்டத்தட்ட இருபது. வருடகாலமாகப் புதுமைப்பித்தனைத் தழுவல் இலக்கியக் கர்த்தா என்றும், இலக்கியத் திருடர் என்றும், தமிழைக்கூட இலக்கண வழுக்கள் இன்றி எழுதத் தெரியாதவர்' என்றும் மறைமுகமாகவும் நேர் முகமாகவும் எழுதி விமர்சனம் என்ற பெயரால் விஷ்மத்தனங்கள் புரிந்து வந்தாரா? அல்லது புதுமைப்பித்தன் மீது தாம் அடிமனத்தில் கொண்டிருந்த வன்மத்தைத்தான் அவர் இவ்வாறெல்லாம் எழுதித் தீர்த்துக் கொண்டாரா? * - உண்மையில் இதெல்லாம் காரணமில்லை. அந்த மூல காரணமே வேறு. அதனை உரிய இடத்தில் பின்னர் பார்ப்போம். இனி மீண்டும், புதுமைப்பித்தனின் சொந்தக் கதைகள் மீதும் தழுவல் முத்திரை குத்த. முயன்ற மேலும் சில முயற்சிகளை ஆராய்வோம்.