பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10 புதுமைப்பித்தன் கதைகள் ஊர்ப் ஏக (அரசாங்கத்தின் பயத்தினால் ஏற்பட்ட) முரட்டுத்தனத் தோடு நடந்துகொண்டார். காளைகள் அவர் வசமாயின. அவ்வளவுதான் மிச்சம். பறைச்சேரியில் களேபரம். வெள்ளையனும் அவன் பெண்டாட்டியும் குய்யோ முறையோ வென்று கத்தினார்கள். வெள்ளையன் கொஞ்சம் முரண்டினான்; உதை கிடைத்தது. பண்ணையார், 'பறச் சனமோ குறச் சனமோ!' என்று வெறுத்துக்கொண்டார். என்ன செய்தாலும் நன்றி யில்லை என்ற மனக் கசப்பு. வெள்ளையன் அன்று இரவு வெகு நேரம் வரை வீட் டிற்கு வரவில்லை. மறுநாள் விடியற்காலமாகப் பண்ணைப் பிள்ளையவர் கள், வெளியில் செல்லுமுன் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று பார்த்துவிட்டுப் போகலாமே என்று, உள்ளே நுழைந்தார். வெள்ளையனின் நோஞ்சான் காளைகள் தான் அசைபோட்டுக்கொண்டு அரவத்தைக் கேட்டு எழுந்திருந்தன. மயிலைக் காளைகள் இரண்டையும் காண வில்லை. உடனே, கி.மு. பிள்ளையைப் எழுப்பிக் காண் பித்துவிட்டு, சவுக்கையின் பக்கத்தில் கிடந்த தலையாரித் தேவனை எழுப்பிச் சமாசாரம் சொன்னார்கள். ஆள் தலையாரித் தேவனுக்கு வெள்ளையன்மீது சந்தேகம். உடனே அவன் வீட்டிற்குச் சென்று பார்க்க, மருதி மட்டுமே அங்கிருந்தாள். புருஷன் எங்கே என்று மூவரும் நின்று விசாரிப்பதைப் பார்த்து, உள்ளுக்குள் பயந்து கொண்டு தன் புருஷன் அவ்வளவு நேரம் வீட்டிலிருந்து விட்டு அப்பொழுதுதான் வெளியே போனான் என்று ஒரு பொய் சொன்னாள். அவள் சொல்வது நிஜமா பொய்யா என்பதைத் தீர் மானிப்பதற்குத் தலையாரித் தேவனுக்கு ஒரே வழி தான் தெரியும். உடனே தலை மயிரைப் பிடித்திழுத்து. அவளைக் கீழே தள்ளி, உதைக்க ஆரம்பித்தான். தேவ னுக்கு மருதியை உதைப்பதில் ஒரு குஷி. . அவள் குய்யோ முறையோ வென்று கத்தினாலும் தலையாரித் தேவனின் ஜபம் சாயவில்லை.அதற்குள் சேரி