பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

104 புதுமைப்பித்தன் கதைகள் மண்டபத்தருகில் நின்ற ஒரு முருங்கை மரத்தைப் பார்த்ததும், எனக்கு ஒரு யோசனை தட்டியது. "உமக்கு உச்சினிபுரத்து வேதாளத்தைத் தெரியுமா?" பயலைத் தூக்கிக்கொண்டு அலைந்தாரே, அவரா? அவர் என் அண்ணா பிள்ளை!" "அந்த விக்கிரமாதித்தப் இதோ ஒரு முருங்கை மரம் இருக்கிறதே, இதில் ஏறி உட்கார்ந்துகொள்ளும் ! நான் வேண்டுமானால் தினம் இங்கு வருகிறேன். உம்முடைய பழைய கதை எல்லாம் சொல்லுமே!" என்றேன். அசடு. ஏமாந்து சொல்லவேண்டுமானால் 'ஓஹோ! அப்படியா சேதி? எங்க அண்ணா சுத்த சொல்லிக்கொண்டு கிடந்தான். நான் என்ன தெரியுமா? உமக்குக் கிடைக்கிற லாபத்தில் சரி பாதி எனக்குக் கொடுக்க வேண்டும். அப்படி ஸ்டாம்பு ஒட்டிப்பத்திரம் எழுதினால் தான் மேலே பேசலாம்!" என்றது. "இப்பொ எல்லாம் புஸ்தக வியாபாரம் கொஞ்சம் மந்தம். நீர் அப்படி யெல்லாம் கேட்கக்கூடாது!" "அப்படியானால் ஒரு கோவிலாவது கட்டிவையும். வேதாளப் பொருளாதார சாஸ்திரத்தில், கோவில் அவ்வளவு லேசாகக் கட்டிவிடலாம் என்றால், மனுஷ உலகத்தில் அப்படி இல்லையே! "பிறகு யோசித்துக் கொள்ளலாம்" என்று நினைத்துக்கொண்டு எழுந்து, தவிடுள்ள அரிசி, 'விடமின் டி' எல்லாம் சேர்த்துக் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொள்ளும்படி அதற்கு ஆலோசனை கூறிவிட்டு காசித் தேவர் வீட்டை நோக்கி நடந்தேன். நான் எப்படிச் சத்தியம் செய்தாலும், அவர் என்னை நம்பப் போகிறாரா? எங்கோ படுத்துத்தூங்கினேன் என்றுதான் சொல்லுவார். நான் திரும்பிப் பார்க்கையில், அந்த வேதாளம் வௌவால் மாதிரிப் பறந்து சென்று, ஓரத்து மலைச் சரிவில் மறைந்துவிட்டது!