பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

106 புதுமைப்பித்தன் கதைகள் களமான பழைய தேகம், துகள்களாகச் சிதைவுபட்டுக் கிடந்தது.ஜடத்திலே வெறும் ஆகர்ஷண சக்தி போல், சூட்சுமமான உருவற்ற கம்பி போல். பார்வைக்குத் தென் படாத ஒளி ரேகை போல், அவ்வுடல் அவனுக்குக் காட்சி யளித்துவந்தது. உலகத்தைப் பதனமாகப் பாதுகாக்க அமைந்த ஏழு சஞ்சி போன்ற லோகங்களிலே, எங்கு வேண்டுமானாலும் அவன் அலையலாம். ஆனால் அவற்றைத் தாண்டி இடை வெளியிலே செல்ல அவனுக்குச் சக்தி யில்லை. நியதியில்லை. அவன் அப்பொழுது நின்ற இடம் ஜடத்தின் சூட்சும ரூபங்களான வாயுக்களும் செல்லக்கூடாத வெறும் சக்தி களே முட்டி மோதிச் சஞ்சரிக்கின்ற, உலக கோளத்தின் மிகவும் சூட்சுமமான ஏழாவது சஞ்சி. அவ்விடத்திலே அவனுக்கு வெகு நேரம் நிற்க முடி யாது. ஆனால்,சூட்சும உடலின் இயற்கையால், அடிக்கடி அங்கு உந்தித் தள்ளப்படுவான். சக்திகள், பிரளயம் போலக் கோஷித்து, உருண்டு புரண்டு, சிறிய வித்துப் போல் நடு மையத்தில் கிடக்கும் ஜடத்திற்கு உயிர் அணுக்களை மிகுந்த வேகத்தில் தள்ளும். அவ்விடத்திலே சக்தி அலைகள், நினைவு பிறந்து மடியும் கால எல்லைக்குள், டைவழித் தேகத்தைக் குழப்பி நசுக்கும், புதிய சக்திகளை அவனது சூட்சும தேகத்தில் ஊட்டி உள்ளே பூமியை நோக்கித் தள்ளிவிடும். புதியசக்தி யூட்டப்பட்ட அவனது சரீரம், ஜட தாதுக்கள் பாசிபோல் உற்பத்தியாகி உரம் பெற்று. கீழ்நோக்கி யிறங்கும் இடைச் சஞ்சிகளில் நின்று செக்கச் செவேலென்று எங்கும் பரந்து,நினைவின் எல்லைக் கோடாகக் கிடக்கும் கிரககோளங்களின் வானப்பாதைகளை நோக்கும். . அவனது உருவம் சூட்சும உருவம். அதாவது ஆசை யின் வடிவத்தை ஏற்கும் உருவம். அவன் தனது பழைய ஜீவியத்தில் எந்த அம்சத்தைப்பற்றி நினைக்கிறானோ, அச் சமயத்தில் முன் அவனது பூத உடல் பெற்றிருந்த வடிவத் தைச் சூட்சும தேகம் இப்பொழுது பெறும். பூதவுடவிலே பார்ப்பதும், கேட்பதும், உண்பதும். வெளிப்படுத்துவதும்