பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

பிரம்ம ராக்ஷஸ் 107 முதலிய காரியங்களைத் தனிப்பட்ட கருவிகள் செய்தன. இப்பொழுது அவனுக்கு உடல் முழுவதுமே வாய். அவன் பார்வைகள் வெளியே எட்டினாலும், ஆசை கள் பூமியை நோக்கி இழுத்தன. ஆசையின் ரேகைகள் அவனைப் பலிபீடத்தை நோக்கி யிழுத்தன! அவன் அன்று பூதவுடலை நீங்கி வெளிப்பட்டதும், இவ்வலகத்தைப் பாதுகாக்கும் ஏழு சஞ்சிகள் போல், உள்ளிருக்கும் வஸ்துவின் விடுதலைக்குத் தடையாக ஏழு இருப்பதையும் உணர்ந்தான். ஒன்றைக் கடந்தால் மற்ற ஆறையும் இறுகப் பிடித்தது போல் ஒன்ற வைத்து, ஏழையும் நீக்கிப் பாயவேண்டும். இப்பொழுது ஒன்றை விட்டுப் பிரிந்ததினால். போக்கின் படியாகக் கிடைக்கும் மரணத்தால் விழிப்பையும் இழந்து, சொப்பனாவஸ்தை போன்ற இந்த இடை நிலையில் கட்டுப்பட வேண்டிய தாயிற்று. ஆசைகள் மெதுவாக மரணத்தை நோக்கித் திரும்பின. பழைய நிலைகள், படிப்படியாகப் பரிணமித்து, அவனையே விழுங்கிப் பூமியை நோக்கித் தள்ளின. பலி பீடத்தில் வந்து வீழ்ந்தான். அவனே பிரம்ம ராக்ஷஸ்! II குறிஞ்சிப்பாடியில் பக்கத்திலே சூரங்காடு பெரிய மலைப் பிரதேசம். காலத் தேவனின் தங்கைகள் போன்ற பாறைகள் இயற்கையின் செழிப்பான கானகம் என்ற அந் தப்புரத்திலே, மறைந்து கிடந்தன. சூரங்காடு மனிதர்கள் பலத்துக்கு நிலைக்களமாக விளங்குவது. அங்கே இருப்பது என்னவென்று ஒருவருக் கும் தெரியாது. எப் குறிஞ்சிப்பாடியின் சமூகத்தின் திவலை ஒன்று, பொழுதோ நெடுங்காலத்திற்கு முன்பு, அதில் சென்றது-