பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

பிரம்ம ராக்ஷஸ் 11I குகை வாயிலைக் கடந்து உள்ளே சென்று, அவன் இருள் திரையில் மறைந்தான். உள்ளே சென்றதும் நன்னய பட்டனுக்குப் புதிய சக்தி பிறந்தது. என்றுமில்லாதபடி, அவன் மூளை, தீவிர மாக, விவரிக்க முடியாத எண்ணங்களில் விழுந்து, அவற் றைத் தாங்கச் சக்தியற்று, புயலில் அகப்பட்ட சிறு படகு போலத் தத்தளிக்கிறது. நெஞ்சுறுதி என்ற சுங்கான், மனத்தின் அறிவு கெட்ட வேகத்தைக் கட்டு மீறிப் போகாது காத்ததினால், நிரந்தரமான பைத்தியம் பிடிக்காது தப்பினான். இருட்டிலே, இருட்டின் நடு மையம் போல்,ஏதோ ஒன்று தெரிந்தது. சிறிது சிறிதாக, மனித உருவம்போல் வடிவெடுத்தது. பின்னர் இருளில் மங்கியது. இதைப் பார்த்த வண்ணமாகவே யிருந்தான் நன்னய பட்டன். அதைத் தவிர மற்ற யாவும் மறந்து போயின. அதைப் பார்த்துக் கொண்டிருக்க இருக்க, இரத்தத் திற்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு புதிய திரவப்பொருள் புரண்டு புரண்டு ஓடுவதுபோல், சிறு வலியுடன் கூடிய இன்பத்தைக் கொடுத்தது. மனத்திலே, குகை மறைந்து, வேறு ஓர் உலகம் தென் பட்டது. ஜடத்திலே தோன்றாத விபரீதமான பிராண சக்திகள், பேரலை வீசி எல்லையற்ற சமுத்திரம் போல் கோஷித்தன. அந்தச் சக்திக் கடலின் திசை முகட்டிலே ஒளிச் சர்ப்பங்கள் விளையாடித் திரிந்தன. இதன் ஒலி தானா, அந்தக் கோர கர்ஜனைகள்! நன்னய பட்டனின் பார்வை மங்கியது. மேகப் படலம் போல் ஏதோ ஒன்று கண்களை மறைத்தது. இருட்டையும் நிசப்தத்தையும் தவிர, அவன் இந்திரியங்கள் வேறொன் றையும் உணரவில்லை. எத்தனை காலம் கழிந்ததோ, அவனுக்கு உணர்வில்லை. மந்திரத்தால் கட்டுண்டு, பின்னர் அதிலிருந்து விலகிய சர்ப் பம்போல் எழுந்து நடந்தான். கால்கள் தள்ளாடின. குகை யின் வெளியில் வருவதற்குள் அவனுக்குப் பெரிய பாடாகி விட்டது.