பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

112 புதுமைப்பித்தன் கதைகள் இவ்வளவும் ஒரு வினாடியில் நடந்தேறியது என்று சொன்னால் நன்னய பட்டன் நம்பமாட்டான். அவன் குழந்தையின் பக்கம் வந்து தரையிலே சோர்ந்து படுத்தான். மனிதனது பலவீன மெல்லாம் இயற்கைத் தாயின் மடியிலே ஒருங்கே தஞ்சம் புகுந்ததுபோல, ஆசை வித் தின் ஆரம்ப வடிவமான குழந்தையின் பக்கத்தில் கிடந்தான். கானகத்திலும் இருள் மயங்கி மடிய, வைகறை பிறந் தது. குகைக்கு மேல் முகட்டுச் சரிவில் நின்ற மாமரக் கொம்பின் கொழுந்துகளில் பொன் முலாம் பூசப்பட் பட்டிருந்தது. நன்னய பட்டன் எழுந்தான். அவனுக்கு முன்பே குழந்தை எழுந்து தவழ்ந்து விளை யாடிக்கொண்டிருந்தது. சூரங்காட்டிலே பசி தீர்த்துக்கொள்ள என்று நெடுந் தூரம் அலைய வேண்டியதில்லை.மா, பலா முதலியவை சாதாரணமாக வளர்ந்து கிடக்கும். பாறைக் குடைவு களிலே குளிர்ந்த சுனை யூற்றுக்களும் ஏராளம். த III ஆசை அவனை மறுபடியும் குகைக்குள் இழுத்தது. குழந்தையை மரத்தடியில் வைத்து விட்டு. உள்ளே சென்றான். குகையில் இருள் திரண்ட ஓரத்திலே கருங்கற் படுக்கை போன்ற ஒரு பாறை, சுற்றிலும், யாரோ ரசவாதி யொருவன், எப்பொழுதோ அங்கிருந்து ஆராய்ச்சி நடத்தி யதுபோல், மட்பாண்டங்ளும் குடுவைகளும், ஓரத்திலே வரிசையாக அடுக்கப்பட்டும், உறி கட்டித் தொங்கவிடப் பட்டும் கிடந்தன. இவ்வாறு அடுக்கடுக்காய்க் கிடந்த மனித வாசத்தின் அறிகுறிகளுக்கிடையில் ஒரு பொருள் அவன் கவனத்தை இழுத்தது.