பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

இல்லை! இல்லை! பிரம்ம ராக்ஷஸ் 115 இரண்டு சரடுகள் விளையங்கள் போல் உயரே யிருந்து தொங்கவிடப்பட்டு, அவற்றின் ஊடே இம்முதலை புகுத் தப்பட்டு,உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. இருட்டின் கூற்றால் முதலில் தெரியவில்லை நன்னய பட்டனுக்கு. சரடு தொங்குவது மெதுவாக அதை யணுகினான். இருட்டில் கால் இடறியது. ஜோதியாக ஒரு திரவ பதார்த்தம் உருண்ட பானையிலிருந்து வழிந்தோடியது. அதன் பளபளப்பு, கருங்கல் தளத்தைத் தங்க மெருகிட்டதுமல்லாது. குகையையே சிறிது பிரகாசமடையச் செய்தது. கள் லாகவமாகப் பலிபீடத்தின்மீது ஒரு காலை வைத்து ஏறி நின்று, அவன் முதலையின் வாயை நோக்கினாள். கண் ஒளி வீசின; வாய் கத்தியால் வெட்டி வைத்த சதைக் கூறுபோல் தெரிந்தது. ஆனால் அதன்மீது சலனம் இல்லை, உயிர் இல்லை. முதலையின் திறந்த வாயில் ஓலைச் சுவடிகள் போல் கட்டுக் கட்டாக என்னவோ இருந்தன. நன்னய பட்டன் அவற்றை யெடுத்தான். ஓலைச் சுவடிகள் போலில்லாமல், அவை மிகவும் கன மாக இருந்தன. அவற்றை அப்படியே சுமந்துகொண்டு வெளியே வந்தான். குகைக்கு அச்சமயத்தில்தான் நன்னய பட்டனுக்குப் 'பூலோகத் தில் இருக்கிறோம்' என்ற உணர்வு ஏற்பட்டது. அத்தனை நேரம், ஜன்னி கண்ட நிலையில், உள்ளுக்குள் போராடும் பயத்தை அமுக்கி, அந்தக் குகை இரகசியங்களைத் துருவிக் கொண்டிருந்தான். குழந்தை, ஒரு மர நிழலில் தவழ்ந்து விளையாடிக் கொண்டு, சிறிது தூரத்தில் இரை பொறுக்கும் மைனா வைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது.