பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

116 புதுமைப்பித்தன் கதைகள் நன்னய பட்டனுக்கு சுயப் பிரக்ஞையாக - அதாவது ஓடித் திரியும் எண்ணக் கோணல்களிலிருந்து யதார்த்த உலகத்திற்குக் கொண்டுவரும் ஒரு துருவ நட்சத்திரமாக அக் குழந்தை இருந்தது. WW அதைத் தூக்கி வைத்துக்கொண்டு கையிலிருந்த ஒலைச் சுவடியை அவிழ்த்தான். வெளிச்சத்தில் பிடித்து. ஏடு ஏடாக வாசித்தான். முதலில் அவனது கவனம் அந்தச் சுவடிகளின் விசித் திரமான குணத்திலேயே தங்கியது. அப்பொழுதுதான் கருக்கிலிருந்து நறுக்கித் திருத்தப்பட்ட பனை ஓலை மாதிரியே காணப்பட்டது. இளம் பச்சைகூட மாறவில்லை. ஓலையில் ஓடும் மெல்லிய நரம்புகள் கூட வெள்ளையாகத் தென்பட்டன. ஆனால் ஒலைதான் உலோகம் போல் கெட்டி யாகவும் கனமாகவும் இருந்தது. அதில் எழுத்துப் களில் சிறிது பளபளப்பு இருந்தது. இதென்ன விசித்திரமான ஓலை என்பது பிடிபடாமல், உள்ளிருக்கும் வாசகத்தை உரக்கப் படிக்க ஆரம்பித் தான்: L காலத்தின் கதியைத் தடை செய்யும் உண் மையைக் கண்டுபிடித்துவிட்டேன். ஆமாம், அது மட்டி லுமா? வெறும் ஜடத்தை, மூலப் பிரகிருதிகளை, பிராண பக்திகொண்டு துடிக்கும் உயிர்க் கோளங்களாக மாற்றுந் திறமை படைத்துவிட்டேன். நான்தான் பிரம்மா! சேதன அசேதனங்கள் எல்லாம் எனது அறமே! நானே நான்! நான் நானே 144444 33 இவ்வாறு சில ஏடுகள், முழுதும் தறிகெட்ட மூளை யின் ஓட்டம் போல், வார்த்தைக் குப்பையால் நிறைக்கப் பட்டிருந்தன. நன்னய பட்டனுக்கு இந்தக் கொந்தளித் துச் செல்லும் லிபிகளின் அர்த்தம் புரியவில்லை. மூளை சுழன்றது? பின்னர் "இவ்வளவு தூரம் உனக்குப் பொறுமையிருக்கிறதா? இனிமேல் என் இரகசியத்தைக் கேள்!"