பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

பிரம்ம ராக்ஷஸ் 117 "பிரபஞ்ச ரகசியத்தை அறிய எங்கெல்லாம் சென் றேன் தெரியுமா? மிசிர தேசம் வரை. அக புராணம் வழி காட்டியது! செமிராமிஸ், காலத்தின் கதியை நிறுத்தும் வித்தையைக் கற்பித்தான். உண்மையில் ஒரு படி அது! அதற்கு மேல் எத்தனை! மூளை குழம்பாது நீ என்னுடன் வருவாயா? அப்படியானால்...... குகைக்குள் மூலையில் தொங்குகிறதே அது முதலைக்கூடு. ஓடிந்து மண் (605) கி மண்ணுடன் சேராதாடி செய்தவன் அவன்தான். அதை இப்பொழுதும் உயிருடன் எழுந்து நடமாடச் செய்யலாம். அதை யார் அறிவித்தான் என்று உனக்குச் சொல்ல வேண்டுமா? அதைத்தான் சொல்ல மாட்டேன். அது உனக்குத் தெரியலாகாது. "வேண்டுமானால் உண்மையைப் பரிசோதித்துப் பார். மூலையில் நீ கொட்டிவிட்டாயே அந்த ஜீவ ரசம், அதை ஒரு துளி எடுத்து, உன் இரத்தத்தில் கலந்து, அதன் மூக்கில் பிடி! அப்புறம் பார்! t "எனது எலும்புக்கூட்டிற்கு உடலளித்துப் பின்னர் என் உயிரை அதில் பெய்யவேண்டும். அப்பொழுதுதான் நான் உனக்கு இரகசியங்களை முடியும்... 31 விளக்கமாகச் சொல்ல இவ்வாறு வாசித்துக்கொண்டிருந்த நன்னய பட்டனுக் குக் கண் பிதுங்குவது போலிருந்தது. என்ன? ஒலை வெறும் ஓலை. அதிலிருந்த ஓர் எழுத்தைக்கூடக் காண வில்லை. அவ்வளவும் மறைந்து, வெறும் தகடுகளாக மங்கி மறையும் சூரிய ஒளியில் சுவடிகள் மின்னின. வாசித்ததெல்லாம் சித்தப் பிரமையா? உண்மையா அல்லது வெறும் து அவன் சொன்னதைப் பரீட்சித்துப் பார்த்தால்? நன்னய பட்டன் மறுபடியும் குகையினுள் சென்றான். குகையிலிருந்த சூரிக் கத்தியால் விரலில் சிறிது நறுக்கி இரத்த மெடுத்து, மின்னிக்கொண்டிருந்த ஜீவ ரசத்தில் கலந்தான். குகை முழுதிலும் சுகமான ஒரு பரிமள கந்தம்பரவியது. அவனுடைய உடலையும் உள்ளத் தையும் மோகலாகிரியில் தள்ளியது. 8