பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

118 புதுமைப்பித்தன் கதைகள் மெதுவாக முதலைக்கூட்டை எடுத்துக் கீழே வைத்து, அதன் மூக்கில் இந்த வாசனைக் கலவையைப் பிடித்தான். சிறிது நேரம் ஒன்றும் நிகழவில்லை. பின்னர். ஒளி யிழந்து நீங்கி ஒரே நிலையில் நின்ற முதலையின் கண்களில் சிறிது பச்சை ஒளி வீசியது. மெதுவாக அதன் அசைந்தது. திறந்தபடியே இருந்த வாய் மெதுவாக மூடி யது. முதலை அவனை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது! உடல் அதே சமயம் 'களுக்' என்ற ஒரு பெண்ணின் சிரிப்பு. ஏறிட்டுப் பார்த்தான் நன்னய பட்டன். எதிரே குகை வாயிலில் தவழுந் தனது குழந்தையின் முன்னால், அழகின் வரம்பைச் சிதற அடித்து, பிறந்த மேனியில் நிற்கும் ஒரு பெண் உருவம், குழந்தையை நோக்கிச் சிரித்த வண்ணம் நின்றது! என்ன அழகு! அப்பெண்ணின் நீண்டு சுருண்ட கறுத்த தலைமயிர், இரு வகிடாக அவளது உடலழகை அப்படியே முழங்கால் வரை மறைத்தது. நன்னய பட்டன் ஸ்தம்பித்து அவளையே நோக்கிய வண்ணம் நின்றான். வைத்த கண் எடுக்க முடியாதபடி அப்படியே நின்றான். . "பயப்படாமல் அவள் திரும்பும்பொழுது கவனி! பின்பு உன் வேலை!" என்றது அவன் காதருகில் ஒரு குரல், அதற்கு என்ன கம்பீரம். என்ன அதிகாரத் தோரணை! அப்பெண்ணோ, நெடு நேரம் குழந்தையையே நோக்கி நின்று சிரித்துக்கொண் டிருந்தாள். குழந்தை யைத் தன்னிடம் வரும்படி சமிக்ஞை செய்தாள். குழந்தை அசையவில்லை. நெடுநேரம் முயன்றும் குழந்தை அசைய வில்லை. மெதுவாக அவள் குழந்தையை ஏறிட்டுப் பார்த்த வண்ணமே. பின்னிட்டு நடந்துவந்தாள். அப்பொழுதும் குழந்தை அசையவில்லை...ஆனால் குழந்தையின் உடல் அவ்விடத்திலேயே கட்டுண்டு கிடப்பதுபோல் பட்டது நன்னய பட்டனுக்கு! ஏனென்றால், அப்படித் தவித்தது குழந்தை அவ்வுருவத்தினிடம் செல்ல! பின்னாகவே அடி யெடுத்து வைத்துச் சென்ற அப்பெண்ணுருவத்தின் முகத்தில் சடக்கென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது. கோபம் தணலாகத் தீப்பொறி பறக்க, முகம் கோரமாகச்