பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

பிரம்ம ராக்ஷஸ் 119 சுருங்கி நிமிர்ந்தது. மேலுதட்டின் அடியிலிருந்து புறப் பட்டன இரண்டு மெல்லிய கோரப் பற்கள்! மின்வெட்டுப் போல் திரும்பியது அவ்வுருவம். அவ் வளவுதான்! என்ன கோரம்! பின்புறம் முழுவதும் வெறும் எலும்புக் கூடு! மண்டையோட்டின் கீழ்ப் பாகத்திலிருந்து தொங்கியது ஒரு சிறு சடை! நன்னய பட்டன்! நன்னய பட்டனா அவன்? அவன் முகமும் உடலும் ஏன் இக்கோர உருப்பெற்றுவிட்டன! கையில் நீண்ட நகம், தேகத்தில் சடைமயிர், வாயில் வச்சிர தந்தம், உதடுகள் நெஞ்சுவரை தொங்குகின்றன பேய்ப்பாய்ச்சலில் சென்று, மறையும் ஒரு பெண்ணுரு வீன் சடையைப் பிடித்துத்திரும்பி, குகையுள் மறைந்தான். வெளியே என்ன ஆச்சரியம்! குமுறும் இடியும் மின்னலும் எங்கிருந்தோ வந்து கவிந்தன. குகைக்குள்ளே பேயுருவத்தில் நடமாடுகிறான் நன்னய பட்டன். பலிபீடத்தின் மீது இருக்கும் எலும்புக் கூட்டின் உட் கலசங்களில் சுருண்டு உவர்ந்திருந்த குடல், ஈரல், இருதயம் இவற்றை எடுத்து வைத்துக் களிமண்ணால் சேர்த்துப் பிணித்துக் கொண்டிருக்கிறான். வெளியே மழையற்று, மின்னல்கள், பிரபஞ்சத்தின் கேலிச் சிரிப்பைப்போல் கெ கலித்துக்கொண்டிருக்கின்றன. அந்த உருவத்தின் தலைமாட்டில் குழந்தை சுய அறிவு இழந்ததுபோல், பிரக்ஞையற்று, விழித்த கண் திறந்தபடி உட்கார்த்தி வைக்கப்பட்டிருக்கிறது. நன்னய பட்டன் அதன் இதயத்துடன் பெண் உரு விடமிருந்து பிடுங்கிய சடையைக் கட்டி, அதன் மற்றொரு மூலையை உருவத்தின் நாபியில் சேர்க்கிறான். அவனது நாக்கு மட்டிலும் சாதாரணமாகத் தொங்கு கிறது. மெதுவாகப் பலிபீடத்தின் தாமரைக் குமிழ்களில் செப்புக் கம்பிகளைப் பின்னி, அவற்றைப் பலிபீடத்தின் மீது வைத்து வளர்த்தப்பட்டிருக்கும் உருவத்தின் கை,