பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

120 புதுமைப்பித்தன் கதைகள் கால், தலை இவற்றுடன் சுற்றி, குகைக்கு வெளியே கொண்டுவந்து ஓர் உயரமான மேட்டில் ஈசான திக்கு நோக்கிய யந்திரம்போல வளைத்துப் பதிக்கிறான். "உம்! உஷார்! ஜீவரசத்தைக் கண்களில் தடவு! என்றது ஒரு குரல். நன்னய பட்டன் அவ்வாறே தடவினான். "கிட்ட நிற்காதே! விலகி நில்!" என்றது குரல். "சட்டச் சடசடா!" என்று ஆரம்பித்துப் புரண்டு வெடித்தது ஒரு பேரிடி. மின்னல வீச்சு, கம்பிகள் வழியாகப் பாய்ந்து, குகை முழுவதும் ஒரே பிரகாசமாக்கிக் கண்ணைப் பறித்தது. "தொட்டுப் பார்" என்றது அக்குரல் மறுபடியும். நன்னய பட்டன் அணுகினான். பலிபீடத்தின் மீதிருந்த உருவத்தைத் தொட்டான்! என்ன ஆச்சரியம்! வெறும் களிமண் சதைக் கோள் மாக மாறிவிட்டது "அதன் நாபியிலும் இதயத்திலும் ஜீவரசத்தைத் தடவு!" நன்னய பட்டன் அப்படியே செய்தான். மறுபடியும் ஏற்பட்டது மின்னலும் இடியும். 'உணர்வு ஏற்பட்டுவிட்டது. தொட்டுப் பார்! இதயம் அடித்துக்கொள்ளும் இனி உயிர்தான் பாக்கி! குழந்தையை அதன் முகத்தில் படுக்கவை!" நன்னய பட்டன் அப்படியே செய்தான். இதற்குள் அவனது கோர உருவத்தில் செம்பாதி மறைந்து விட்டது. முதலில் அந்த மூலையில் இருக்கும் மருந்தைக் கையில் தடவி, உருவத்தின் கைகளை உன் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு, முதலையின் முதுகில் நில்! ஒரு கையை எடுத்தால் உன் உயிர் போவது நிச்சயம். ஜீவ ரசத்தை எடுத்து இருவர் மீதும் கொட்டிவிட்டு, நான் சொன்னதுபோல் செய்!" என்றது அக்குரல்.