பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

பிரம்ம ராக்ஷஸ் 121 நன்னய பட்டன், யந்திரம் போல, அவற்றைச் செய்து முடித்தான். << உருவத்தின் கண்களையே பார்! வேறு பக்கம் திரும் பரதே !" மறுபடியும் இடி இடிக்க ஆரம்பித்தது! கோர இடி சமுத்திர அலை போல் தனது உள்ளுணர்வைத் தாக்கி உடலில் தாங்கொணா வேகத்தில் புரளுவதை அறிந்தான். உருவத்தின் மீது வைத்த கண் மாறவில்லை. உருவத்தின் கண்கள் மெதுவாக அசைகின்றன. அதன் நெற்றியில் சிறு வியர்வை துளிர்க்கிறது. கண்கள் மெதுவாகத் திறக்கின்றன. குரல். அச்சமயம் 'களுக்' கென்று பெண்ணின் சிரிப்புக் மறுபடியும் அதே உருவமா! பார்க்கவேண்டுமென்ற ஆசை மறுபடியும் அதன் உருவப் பிரமையில் சென்று லயித்தது. மெதுவாகக் கண்ணைத் திருப்பினான். அப் பேயுருவம் மெதுவாகப் பலிபீடத்தை அணுகிச் சடையை எடுக்க முயன்றது. கட்டளையை மறந்து அதைத் தட்டக் கையெடுத்தான்! எடுக்காதே!" என்ற அதிகாரத் தொனியுள்ள குரல்! உருகிய பிழம்புகள் பாதங்கள் வழியாக இதயத்தை நோக்கிப் பாய்வது போல, ஒரு சிறு வினாடி நினைத்தான். அவ்வளவுதான் மற்றொரு பேரிடி! நீட்டின கையை மடக்க முடிய வில்லை. ஒரு கணத்தில் மூன்று எலும்புக் கூடுகள் தான் பலி பீடத்தின் மீது கிடந்தன. ஏக்கமான பெருமூச்சு, குகையினின்று வெளிப்பட்டு வான வெளியில் மறைந்தது. இன்னும் எத்தனை காலம்!