பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

. வாழ்க்கை! 123 மேகங்களில் மறைந்து, அதற்குச் சிவப்பும், பொன்னு மான ஜரிகைக் கறையிட்ட சூரியன், கீழ்த் கீழ்த் திசையில் மிதக்கும் பஞ்சு மேகங்களில் தனது பல வர்ணக் கனவு களைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டான். பொதியை, பெரிய ரிஷிக் கிழவர் மாதிரி, கருநீலமும் வெண்மையும் கலந்து கறையேற்றிய மஞ்சுத் தாடிகளை அடிக்கடி ரூபம் மாற்றிக்கொண்டு, பார்ப்பவனின் மனத்தில் சொல்ல சோகம். அமைதி, துன்பக் கலப்பில்லாத இவற்றை எழுப்பியது. பக்கத்தில், அதாவது இரு சிகரங் களுக்கும் ஊடே தெரியும் வான வெளியில் அக்னிக் கரை யிட்ட கறுப்பு மேகங்கள் அதற்குத் துணை புரிந்தன என்று சொல்லலாம். சக்தி பூஜைக்காரனுக்கு. சிவனும் சக்தியும் மாதிரி இக்காட்சி தோன்றியிருக்கும். முடியாத விக்கிரமசிங்கபுரத்திற்கு இரண்டாவது மைலில், மலையை நோக்கி, அதாவது, பாபநாசத்தை நோக்கி, ஒரு வன் நடந்துகொண்டிருந்தான். நாற்பது வயது இருக்கும். இடையிடையே நரையோடிய தூசி படிந்த கறுப்புத்தாடி. அகன்ற நெற்றியின்மீது சிறிது வழுக்கை விட்டு, இரண்டு பக்கமும் கோதாமல் வளர்ந்து பின்னிய தலை மயிர், உச்சி யில் சிறிது வழுக்கையைக் காண்பித்து, கழுத்தை நன்றாக மறைத்தது. மூக்கு நீண்டிருந்தாலும் வாலிபத்தின் பிடிப்பு வீட்டதினால், சிறிது தொங்கி மீசையில் மறைந் தது. கீழுதடு மட்டிலும் மீசைக்கு வெளியே தெரிந்தது. வாயின் இருபுறத்திலும் மூக்கிலிருந்து ஆரம்பித்து தாடி யில் மறையும் கோடுகள். அடிக்கடி நினைத்து நினைத்து நெஞ்சை யலட்டிக் கொள்வதனால் சுருக்கல் விழுந்து கண் ணின்மீது தொங்கும் புருவங்கள். உடல் திடகாத்திரமான தன்று; ஆனால் நாடோடியாக அலைந்து மரத்துப் போன தேகம். கிழிந்த சட்டையும் ஓரங்களில் முழங்கால் தடுக்கிய தால் கரைகள் கிழிந்த வேஷ்டியும் உடுத்தியிருந்தான். கைகளும் கண்களும் அவன் வயிற்றிற்காகத் திரியும் நாடோடியல்ல என்பதைக் காண்பித்தன. கையிலே ஒரு தடி, தோள் பட்டையில் ஒரு மூட்டை- அதில் செம்பும் புஸ்தகமும் துருத்திக்கொண்டிருந்தன - அதன் மேல் ஒரு கம்பளி. ஒரு