பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

124 புதுமைப்பித்தன் கதைகள் கண்களில், அடிக்கடி ஏதோ ஒருபெரிய ஏமாற்றத்தை ஒவ்வொரு நிமிஷமும் அனுபவிப்பவன் போல், ஒரு பிரகாசம்; அதனுடன் கலந்து. ஒரு பரிதாபகரமான, தோற்றவனின் சிரிப்பு. கண்கள் அவன் செல்லும் திக்கை நோக்காது வானிலும் மலையிலும்; ஒன்றையும் பற்றாது சலித்துக் கொண்டிருந்தன. கால்கள் நெடுந்தூரம் நடந் தாற்போல் ஒவ்வொரு நிமிஷமும் குழலாடின. மூட்டையை எடுத்து மரத்தடியில் வைத்து, பக்கத் தில் தடியைச் சாத்திவிட்டு உட்கார்ந்து, முழங்காலையும் குதிரைச் சதையையும் 'தடவிக்கொண்டு, அப்பாடா/" என்று சாய்ந்துகொண்டான். இனி அந்த இடந்தான் வீடு. மூட்டையைப் பரப்பினால் தட்டுமுட்டு சாமான்கள். இரவைக் கழிப்பதற்கு வேண்டிய சாப்பாட்டு வகைகள்! அங்கேயே உட்கார்ந்துகொண்டால் தண்ணீருக்கு எங்கே போவது? நாடோடிக்கு ஒன்றும் புரியவில்லை. கால் சொல் வதைக் கேட்டால் அன்றிரவு பட்டினி இருக்கவேண்டியது தான்.சீ.என்ன கஷ்டம்! ஏதாவது அற்புதம் ஒன்று நடந்து, தான் நினைத்த இடத்திற்குப் போய்விடக் கூடாதா என்று அவன் மனக் குரங்கிற்குச் சிறிது ஆசை எழுந்தது. உதட்டில் ஒரு சிரிப்புடன் காலைத் தடவிக்கொண்டு, வேஷ்டியில் ஒட்டி யிருந்த ஒரு சிறு வண்டைத் தட்டினான். அப்பொழுது, அவன் வந்த திக்கிலிருந்து, 'ஜல்! ஜல்!' என்று சலங்கைகள் ஒலிக்க. தடதடவென்று ஓர் இரட்டை மாட்டு வண்டி வந்துகொண்டிருந்தது. வண்டிக் காரன் மாடுகளை 'தை! தை!" என்று விரட்டி, 'தங்கம் தில்லாலே' என்று பாடிக்கொண்டு வாலை முறுக்கினான். வண்டி காலி. இல்லாவிட்டால் பாடிக்கொண்டு போக அவனுக்கு அவ்வளவு தைரியமா? "ஓய், வண்டிக்காரரே! எவ்வளவு தூரம்? நானும் ஏறிக்கொள்ளட்டுமா?" என்றான் சாலையில் உட்கார்ந் திருந்த நாடோடி. "வண்டியா! பாவநாசத்துக்கு. வேணுமானா பெறத் தாவே ஏறிக்கிரும்/" என்றான் வண்டிக்காரன்.