பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

126 புதுமைப்பித்தன் கதைகள் 4 தான் பேசினாலும், இதற்குமேல் ஒன்றும் கிடையாது. அதற்கப்புறம் சமூகம். அன்றைக்கு அந்தப் பயல் ஜட்ஜ் மென்ட் சொன்ன மாதிரிதான்.. பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம். ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், 'குற்றம் செய்கிறாய்!' என்று தண்டிக்க வருகிறது. இதுதான் சமூகம்! இந்த அசட்டு மனிதக் கூட்டத்தின் பிச்சைக்காரத்தனம்... புனிதமாக ஏதாவது ஒன்று இருக்கிறதா? இந்தப் பால். காரன் விற்கிற பாலுக்கும், உலகத்தின் நன்மைக்கும் வித்தியாசமில்லை. நாமாக நினைத்துக் கொண்டால் நன்மை தான். பின் ஏன் இந்தப் பித்தலாட்டமான இலட்சியங் களை அறிந்துகொள்ள வேண்டும்! அதனால்தானே இந்த ஏமாற்றம், தொந்தரவு மிருகம் மாதிரி இருந்து தொலைத் தால் என்ன கெட்டுப் போகிறதோ? அசட்டுச் சமூகத்திற் கேற்ற அசட்டுப் பித்தலாட்டங்கள். இதில் நான சொல்வதுதான் சரி' என்ற கட்சி. லோகத்தை லோகத்தை மாற்றி யமைக்கப் போராளாம்... அதுவுந்தான் விடிய விடிய நடக்கிறதே..." பெரியவரே, இங்கேயே எறங்கிக்கிடும்! அய்யரு கண்டா கட்டிவச்சு அடிப்பாரு... நீங்க எந்தூரு?" என்றான் வண்டிக்காரன். f , . "இந்தா, பலகாரம் வாங்கிச் சாப்பிடு" என்று ஓரணா வைக் கொடுத்து விட்டு, இறங்கிக் கோவிலுக்குள் செல் லும் வழியில் பக்கத்திலிருந்த இட்டிலிக் கடையில்- அதற்கு 'ஓட்டல்' என்று பெயர் - நுழைந்து, கைகால் கழுவிவிட்டு முகத்தைத் துடைத்தான் நாடோடி. அப்பொழுது நன்றாக அந்தி மயங்கி விளக்கேற்றப் பட்டுவிட்டது. "கோவிலிலே கட்டி வாங்க நேரஞ் செல்லுமா?" என்றான் நாடோடி. "ஆமாம், பூசையாயித்தானே! எட்டு மணி ஆகும்! அப்போ ஒரு அணாவுக்கு இட்டிலி இலையில் கட்டிக் கொடு" என்று வாங்கிக்கொண்டு, பழைய பாபநாசத் திற்குப் போகும் பாதையில் இருக்கும் மண்டபத்தை நோக்கி நடந்தான்.