பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

வாழ்க்கை! 127 மண்டபத்தில் அவன் எதிர்பார்த்தபடி நிம்மதியில்லை. பண்ணை அய்யர் 'தியாசபி' (பிரம்மஞான) கோஷ்டிக்கு விருந்து நடத்தும்பொழுது அங்கு அமைதி எப்படி இருக்க முடியும்!சமயம், அரசியல் முதல், நேற்றுச் செய்த சமை யல்வரை சம்பாஷணையில் அடிபடுகிறது. "வாழ்க்கையின் இணைப்பையும், சமயத்தின் சாரத் தையும் அறிவிப்பதுதான் தியாசபி, ஸார்!" என்றது ஒரு குரல். "நேற்று ஸ்கானம் செய்யரப்போ,மிஸ்டர் கிருஷ்ணன் இதைக் கேளுங்களேன்! ஒரு மான் குட்டி முண்டந் துறை யிலே துள்ளித்தே. நீங்க பார்த்தியளா?" என்றது ஒரு பெண் குரல். ஆங்கிலத்தில், "நம் கூட்டத்தில் மான்களுக்குக் குறைச்சலில்லை!" என்றது ஒரு கரடிக் குரல். உடனே கொல்லென்ற சிரிப்பு. "பேசாமலிருங்கள், சுவாமிஜீ பேசப் போகிறார்!" நாடோடி, படித்துறையில் இட்டிலியை வைத்து விட்டு, கால் முகம் கழுவ ஜலத்தில் இறங்கினான்.அப்பா. என்ன சுகம்! மெய்ம்மறந்தபடி கல்லில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டுத் துழாவிக்கொண்டே யிருந்தான். "நமது வாழ்க்கையிலே, அசட்டுத்தனத்திற்காகப் போராடுவது, மிருகத்தனத்திற்காகச் சச்சரவு செய்வது இயற்கை..." என்ற சுவாமிஜீயின் குரல் கம்பீரமாக எழுந்தது. நாடோடி இலை முடிப்பை அவிழ்த்தான். "சாமி, பசியா இருக்குது!ஒரு இட்டிலி..." என்ற குழந்தைக் குரல் ஒன்று அவன் பக்கத்தில் கேட்டது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. தெரியவில்லை. இருட்டோடு இருட்டாகப் பாறையின் பக்கத்தில் நின்றது ஒரு சிறு குளுவ ஜாதிக் குழந்தை. "எங்கே! இங்கேயா நிக்கிறே! இந்தா! உங்கப்பன் எங்கே! இருட்டிலே எப்படி வந்தே...?"