பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

துன்பக் கேணி 13 மார்ட்டின் கிரௌனின் திட்டமான அபிப்பிராயம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால். ஸர் ஜோஸப் சீமையைவிட்டுச் சிறிதாவது விலகியதே கிடையாது. இங்கிலீஷ் பீப்'பும் (மாட்டுக்கறி), இங்கிலீஷ் 'பேக்க'னும் (பன்றி இறைச்சி) அவர் சொந்தப் பார்வையிலேயே தயாரிக்கப்படாத தேசம் அவர் தேகத்திற்கு ஒத்துவராது என்று, அவருடைய ஹார்லிதெரு (லண்டனில் பிரபல வைத்தியர்கள் வசிக்குமிடம்) குடும்ப வைத்திய நிபுணர் அவருக்குக் கூறியிருக்கிறாராம். அதற்காக, விற்கும் சூரியஉஷ்ணத்திற்கும் வருஷம் 2,000 பவுனுக்கு கொடுப்பதாக நபர்களிடம் ஒப்புக்கொள்ளும் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தை அவர் விட்டுவிடுவது வழக்கம். ஈடு மலேரியா தற்பொழுது பாட்ரிக்ஸன் ஸ்மித் என்பவர் 'வாட்டர் பால்'ஸில் நிர்வாகத்தை ஏற்று நடத்தும் 45-வயதுப் பிரம்மச்சாரி. அவருக்கு இரண்டு விஷயங்கள் சந்தேக மில்லாமல் தெரியும். ஒன்று, இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் பிரம்மச்சாரியாக இருப்பது என்பதன் அர்த்தம்; இரண்டாவது. தேயிலை உற்பத்தியில் கறுப்பு மனிதர்களுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது. இதற்கு மேலாகக் கறுப்புக் கூலிகளின் பாஷை யும் நன்றாகத் தெரியும். கறுப்பு மனிதர்கள் வோட்டர் பால்ஸ் என்ற இடத்தை 'வாட்டர் பாலம்' என்று கூறுவார்கள். இலங்கைக் குன்றுகளின் சரிவில் ஒரு நீர்வீழ்ச்சியின் பக்கத்தில் இருப்பதால் அதற்கு அந்தப் பெயர் வந்தது. அந்த மலைச் சரிவில், இரண்டு மைல் நீளமும், மூன்று மைல் அகலமுமுள்ள தேயிலைக் காடு நீர் வீழ்ச்சியின் இரு பக்கத்திலும் உள்ளது. துரையவர்களின் பங்களா நீர்வீழ்ச்சிக்கு மேலே ஒரு பாறையின் மீது கட்டப்பட் டிருக்கிறது. அதற்கு எதிரே, அந்தப் பெயரற்ற காட் டாற்றின் மறு பக்கத்தில், கூவிகளின் காறைக் குடிசை கள் - கோழிக்கூடுகள் மாதிரி. அதற்கும் தள்ளி, ஒரு ஆஸ்பத்திரி, மற்ற கறுப்பு அதிகாரிகள் இருக்கும் இடங்கள்.அதிகாரிகளோ, தோலைத் தவிர மற்ற எல்லா