பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

தெரு விளக்கு 131 ஒத்த வயதில்தானே நட்பு ஏற்படும். இதில் என்ன அதிசயம்! விளக்கிற்குக் கிழவன். கிழவனுக்கு விளக்கு. விளக்கை எடுத்துவிடப் போகிறார்கள் என்று கிழவ னுக்குத் தெரியாது. அவனுக்கு எப்படித் தெரியும்? அவன் வயிற்றுக்குப் பிச்சை எடுக்க வேண்டாமா? வயிற்றுக்கில்லாமல் உயிர் வாழ முடியுமா? தெரு விளக்கு அவன் தோழன்தான். அதன் வெளிச் சம் அவனுக்கு எவ்வளவு மன நிம்மதியை அளித்தது! அன்று சாயங்காலம் வந்தான். வெறும் குழி ஒன்றுதான் இருந்தது. இருள் ! இருள்! பற்றுக்கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்ட குருடனின் நிலை! அன்று அவனுக்கு உலகம் சூனியமாய், பாழ் வெளி யாய், அர்த்தமற்றதாய் இருந்தது. சாந்தி? அது எங்கிருந்து வரும்/ உடைந்த தெரு விளக்குத்தான்! ஆனால், கொஞ்ச மாவது அவனைத் தேற்றி வந்ததே! வெளிச்சமில்லா விட்டாலும், ஸ்பரிசித்துப் பார்த்து ஆறுதலடைய வெறுங் கல்லாவது இருந்ததே? மறுநாள் காலை, ஒரு கிழவனின் சவம் அங்கு கிடந்த தைக் கண்டார்கள்.