இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
132
132 புதுமைப்பித்தன் கதைகள் இப்பொழுது ஒரு புது விளக்கு! மின்சார விளக்கு! அதன் கீழே குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பழைய விளக்கையும் பழைய கிழவனை யும் பற்றிக் கவலை என்ன? ஒரு காலத்தில் இவர்களும் அப்படித்தான் ஆவார்கள்! அதற்கென்ன? எங்கும்,எப்பொழுதும் அப்படித்தான். பழையன கழியும், புதியன வரும். இது உலக இயற்கையாம்!