பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

கவந்தனும் காமனும் 135 தன் நினைவில்லாமலே ஒரு வாலிபன் தெரு வழியாக வருகிறான். களைப்பு, பசி இவை இரண்டுந்தான் அப்பொழுது அவனுக்குத் தெரியும். மனிதனை மிருக மாக்கும் இந்தத் தெரு வழியாகத்தான் அவன் ஆபீஸுக் குச் செல்வது வழக்கம். அந்தப் பெயரற்ற ஆபீஸ், அவனை முப்பது ரூபாய்களுக்குச் சக்கையாகப் பிழிந் தெடுத்த பிறகு. இந்த உணர்ச்சிதான் வருமாக்கும்! அதோ அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஒருவன் - இவனை விட அதிகமாகக் கொழுத்த தீனியா தின்கிறான்? அவன் தன்னை மறக்க - யோகிகளைப்போல் அல்ல - குடிக்கிறான். இவனுக்கு அது தெரியாது. ஒரு மூலை திரும்புகிறான்; சற்று ஒதுக்கமான மூலை. அலங்கோலமான ஸ்திதியில் ஒரு பெண்! பதினாறு. பதினேழு வயது இருக்கும். காலணா அகலம் குங்குமப் பொட்டு, மல்லிகைப் பூ, இன்னும் விளம்பரத்திற்குரிய சரக்குகள், அவளை அவன் கவனிக்கவில்லை. "என்னாப்பா,சும்மாப் போரே? வாரியா? வாலிபன் திடுக்கிட்டு நிற்கிறான். "நீ என்னாப்பா, இதான் மொதல் தரமா? பயப் படுரியே?" கையை எட்டிப் பிடித்தாள். "உன் பெய ரென்ன? 'ஏம் பேரு ஒனக்கு என்னாத்துக்கு? இவனுக்கு என்னசெய்வதென்று தெரியவில்லை. ஒரே ஒரு வழிதான் புலப்படுகிறது. அதற்குள் அவள் சந்திற்குள் இழுக்கிறாள். வாலிபன் உடனே மடியிலிருந்த சில்லறைகளை யெல்லாம் அவள் கையில் திணித்துவிட்டு, "போ! போ!" என்று அவளை நெட்டித் தள்ளிவிட்டு ஓடிவிடுகிறான். .