பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

ஞானக் குகை 139 பிரதேசத்தைச் சுற்றிவர ஆரம்பித்தான். உபாத்தியாயர் சொன்னபடி உள்ளுணர்வு வளர்ந்ததோ என்னவோ. ஈசனுக்குத்தான் வெளிச்சம். ஆனால். ஆந்தையையும். கோட்டானையும், சில் வண்டுகளையும் தேடியவையும் முயற்சி யில் எப்படியோ அவன் ஈடுபட ஆரம்பித்தான். அதில் மனத்தைப் பறிகொடுத்தான் என்றே சொல்லவேண்டும். வேப்பங்காயாகி அவனுக்கு வீட்டுக்கு வருவதென்றாலே விட்டது. தேவருக்குப் பிரச்னை மேல் பிரச்னையைக் கொடுத்துப் பரிசோதிக்க வேண்டும் என்று, அவர் பிள்ளைக்காக வழி பட்ட கடவுளுக்கு ஆசையிருந்தது போலும்! பையனை வீட்டுக்குத் திருப்புவது எப்படி என்றாகிவிட்டது. நீண்ட யோசனையின் பேரில் அவர் ஒரு முடிவுக்கு செய்து வந்தார். என்ன அசடனானாலும் பையன் ஒரு மனிதப் பிராணிதானே! அவனுக்குக் கலியாணத்தைச் வைத்தால் வீட்டுப் பற்று ஏற்படக்கூடும் நினைத்தார். என்று கிடைக் தேவருடைய வட்டாரத்திற்குள் பெண்ணா காமற் போய்விடும்? மருதையாத் தேவன் ஏழைதான். அதனால் அவன் மகள் அழகாக இருக்கக் கூடாதா? கருப்பாயி பேருக்கு ஏற்ற கறுப்பாக இருந்தாலும் நல்ல அழகி. அவள் தேவரின் கட்டளையின் போல் அவன் முன்பு தென்பட ஆரம்பித்ததிலிருந்து,தேவருடைய மகன் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. கருப்பாயியைக் கண்டவுடன் அவன் முகம் அறிவுக்களையுடன் பிரகாசிக் கும். கருப்பாயிக்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் இருக் கின்றது என்று அந்த இருண்ட சித்தத்தில் மின் வெட்டுக் கள்போல் தோன்றலாயிற்று. அச்சமயத்தில் அவனுக்கு வயது பதினைந்து. 'அப்பா' 'அம்மா' என்ற இரண்டு சொற்களுடன் இப்பொழுது 'கருப்பாயி' என்ற வார்த்தையும் தெரியும். குறுமலைக் குன்றின் காடுகளும் அவனுக்குத் தெரியும்.