பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

142 புதுமைப்பித்தன் கதைகள் அந்தத் தவ உருவத்தின் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. கண்களில் ஒரு கணம் சிந்தனை தேங்கி யது. அசட்டுக் குழந்தையின் கண்களையே அது கூர்ந்து கவனித்தது. ஸ்பரிசத்திலே புளகாங்கிதமடைந்த குழந்தையின் சிரிப்பு, படிப்படியாக மறைந்தது. கண்களில் அறிவுச் சுடர் ததும்பியது. "என்னுடன் வா!" என்று குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு வந்த வழியே திரும்பியது உருவம். குகையில் படிப்படியாக இருள் கவிய ஆரம்பித்தது. அமைதி குடிகொண்டது. பழைய இருள், பழைய அமைதி. III தவ உருவமும் பையனும் நெடுந்தூரம் நடந்து சென்றார்கள். சுனையைத் தாண்டியதும் மணல். எவ்வளவு தூரம் சென்றார்களோ! குகை விரிந்து விரிந்து இரண்டு பிரமாண் டமான பாறைச் சுவர்களாயிற்று. எங்கோ, உயரப் பறவைகள் எட்டிப் பிடிக்கும் தூரத்தில், வானத்தின் துண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங் களைக் காண்பித்து வழி காட்டியது. முனி உருவம் கத்திபோல் கதிக்கச் சென்றது. அசட் டுக் குழந்தை பாறையையும் வானத்தையும் பார்த்துச் சிரித்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தது. இருவரும் மணல் வழியின் கடைசியை அடைந்தார் கள். அங்கும் பாறைச் சுவர் வழியை மூடியிருந்தது. அந்த மூலையில் ஒரு சுனை. அதன் பக்கத்தில் ஒரு பாறை. பாறையின்மீது இருவரும் உட்கார்ந்தனர். முனிவர் குழந்தையைத் தன் மூகமாக உட்கார வைத்து, அதன் கண்களில் நோக்கி மந்திரத்தை உச்சரித் தார்.