பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

திறந்த ஜன்னல் சாயங்காலம். சிறு பசி என்ற நினைப்பைச் சாந்தி ஹோட்டலுக்குள் சென்றேன். செய்ய ஒரு செய்ய கூட்டத்திலே இடம் கிடைப்பது கஷ்டந்தான்; எனி னும்,என் அதிர்ஷ்டம் ஒரு மேஜை காலியாயிருந்தது. போய் உட்கார்ந்தேன். "என்ன ஸார் வேண்டும்?" ஏதோ வேண்டியதைச் சொல்லிவிட்டு, என்னத் தையோ பற்றி யோசித்துக்கொண்டு இருந்துவிட்டேன். அவன் வைத்துவிட்டுப் போனதையும் கவனிக்கவில்லை. மறுபடியும்,'என்ன ஸார் வேண்டும்?" என்ற குரல் கேட்டது. "முன்பே சொல்லியாகிவிட்டதே!" என்று நினைத்துத் திரும்பினேன். அவன் கேட்டது என்னையல்ல; என் எதிரிலிருந்த ஒருவரை. மெலிந்த தேகம்; கிழிந்த சட்டை, ஆனால் அழுக்கில்லை; கிழிசல் தைக்கப்பட்டிருந்தது. இரண்டு மூன்றுவாரம் கத்தி படாத முகம்: சோர்வடைந்திருந் தாலும் கண்களில் ஒருவிதப் பிரகாசம் தென்பட்டது. கீழே குனிந்து, மேஜைக்கு அடியிலிருந்த கைகளைக் கவனித்துவிட்டு,ஒரு பெருமூச்சுடன், (அது வெகு மெது வாக வந்தது) 'அரை கப் காப்பி!" என்றார். தது. முகத்தில் 'பசி' என்பது ஸ்பஷ்டமாக எழுதி யிருந்