பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

146 புதுமைப்பித்தன் கதைகள் கையில் சில்லறை யில்லை போலும்! இதனால்தான் கீழே கவனித்துப் பார்த்துக்கொண்டார். பார்ப்பானேன்? நினைவில் இல்லாமலா போய்விடுய்? யாரோ என்னைப்போல் இலக்கிய உலகத்தில் வேலை செய்பவர் என்ற முடிவிற்கு வந்தேன். அவர்களுக்குத்தானே இந்தக் கதி வரும்! சகோதரத் தொழிலாளி என்ற பாசம் ஏற்பட்டது. உதவி செய்யவேண்டுமென்ற ஆசை. தர்ம உணர்ச்சியாலல்ல, சகோதர பாசத்தால். எப்படி ஆரம்பிப்பது? கோபித்துக்கொள்வாரோ என்னவோ? பக்குவமாகச் சொல்லிப் பார்த்தால் என்ன குடி முழுகிப் போகிறது? "தங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே!" என்று மனமறிந்து பொய் கூறினேன். "பார்த்திருக்க முடியாது! இது தடையுத்தரவு மாதிரி இருந்தது. இருந்தாலும் இன்னொரு தடவை. "எனக்குப் பசி பிராணன் போகிறதே! தங்களுக்கு உடம்பிற்கு என்ன?" என்று காப்பிக் கோப்பையைக் கூர்ந்து நோக்கினேன். "பசியாமல் ஏன் ஓட்டலுக்கு என்றார். வரவேண்டும்?" நீங்கள் இருக்கவேண்டும். "மறந்து போயிருக்கும்; அனொலென்ன? இன்று என்னுடைய விருந்தினராக இன்று என் பிறந்த நாள்!" என்றேன். "காசைக் கண்டபடி இறைக்காதேயும்" என்றார். "பாதகமில்லை. தயவு செய்து 39 குதூகல "சரி, உமதிஷ்டம்" என்றார். இருவரும் மாகச் சாப்பிட்டோம். குதூகலம் என்னுடையது; அவர் மௌனமாகத்தான் சாப்பிட்டார். இடையிலே இரண் டொரு வார்த்தை சிக்கனமாக இருப்பதைப் பற்றி, வெகு கூச்சமுள்ள பிராணி போலும்! இந்த ரகத்தை எனக்கு நன்றாகத் தெரியும். இலக்கியத்தில் இது எதிர்பார்க்கக்