பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

திறந்த ஜன்னல் 147 கூடிய விஷயமே. மிகவும் கஷ்டப்பட்டவர். அதனால்தான் சிக்கனத்தில் அதிகக் கருத்து! மனம் ஒரு குழந்தையைப் போஷிப்பதைப்போல் கோணாமல் நாசூக்காகச் செய்தேன்.'பில்' ஏறக்குறைய ஒரு ரூபாயை எட்டிவிட்டது. எழுந்திருந்தோம். மெளனமாக அவர் முன் சென்றார். பணத்தைக் கொடுக்கச் சில நிமிஷம் தாமதித்தேன். நேராக வெளியே சென்று ஒரு பளபளப்பான ஹில்மன்' காரில் கூசாமல் ஏறி உட்கார்ந்தார் அந்த மனுஷர். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பைத்தியமோ என்ற சந்தேகம். மோட்டார் டிரைவர் இயற்கையான சாவதானத்துடன் காரை விட்டுக்கொண்டு போய்விட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஹோட்டல் காஷியர்' என்னமோ தெரிந்தவர்போல் விழுந்து விழுந்து சிரித்தார். நான் விழித்தேன். "அவன் பெரிய லக்ஷாதிபதி. பெரிய கருமி, கஞ்சன். யார் தலையையும் தடவுவதில் - இந்தச் சாப்பாட்டு விஷயத் தில்தான் -- ஒரு பைத்தியம். இன்று நீர் அசப்பட்டுக் கொண்டீர் போலிருக்கிறது!" என்றார். யாது. 4 நானும் சிரித்தேன். எதற்கு என்று எனக்குத் தெரி 'தர்மம் செய்வதில் எவ்வளவு கஷ்டம் உண்டு பார்த் தீரா?" என்றார். நான் தர்மம் செய்யவில்லையே!" விட்டு வெளியே வந்தேன். என்று சொல்லி