பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மனித யந்திரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா: அவர், உப்புப் புளி பற்றுவரவு கணக்கின் மூலமாகவும் படிக் கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும், மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களை யும் அளந்தவர். அவருக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக. அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக்காலத்தில் அடக்க மான வெறும் மூலைத் தெரு ராமு கடையாகத்தான் இருக் தது. கடையும் பிள்ளையவர்களுடன் வளர்ந்தது. ஆனால் அதில் சுவாரஸ்யமென்னவெனில், வெறும் மீனாச்சி" ஸ்ரீ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையாகப் பரிணமித்தாலும், அவருக்கு அந்தப் பழையதுதான். அந்தக் காவியேறிய கம்பிக்கரை வேஷ்டிதான். கடைக்கு முன்னால் இருந்த காறையும் கூரையும் போய், ரீ - இன்போர்ஸ்ட் காங்க்ரீட், எலெக்ட்ரிக் லைட், கௌண்டர்,முதலிய அந்தஸ்துகள் எல்லாம் வந்துவிட்டன. கடையும் பிள்ளையும் ஒன்றாக வளர்ந்தார்கள்; ஆனால் ஒட்டி வளரவில்லை. கடையில் வரவு செலவு வளர்ந்தது: பிள்ளையவர்களுக்குக் கவலையும் வளர்ந்தது. . ஸ்ரீ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை பற்று வரவு கணக்கு களில் உள்ள சிக்கல்களையெல்லாம் அற்புதமாகத் தீர்த்து வைப்பார். அந்தக் காலத்தில் புன்னை எண்ணெய்க் குத்து விளக்கடியில் இரவு பன்னிரண்டு மணிவரை மல்லாடுவார். இப்பொழுதும் அந்த மல்லாட் டத்திற்கெல்லாம் குறைச்சல் இல்லை;- ஆனால் இப் பொழுது, மின்சார விளக்கும் விசிறியும் உடன் விழித்