பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

மனித யந்திரம் 149 திருக்கும். அவரது சம்பளமும் ஆமை வேகத்தில் 'ஓடி' மாதத்துக்கு ரூ 20 என்ற எல்லையை எட்டிவிட்டது. பற்று வரவு கணக்கு நிபுணர் ஸ்ரீ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திறமை யெல்லாம் அந்த ஸ்டோர் கடை யுடன்தான். வீட்டு வரவு செலவுக் கணக்கு மட்டும், அவருடைய இந்திர ஜால வித்தைகளுக்கெல்லாம் மீறி, உலகளந்த பெருமாளாக, சென்ற நாற்பத்தைந்து வருஷங் களாகப் பரந்து கிடக்கிறது; பரந்துகொண்டு வருகிறது. காலை ஐந்து மணிக்கு, ஈர ஆற்று மணல் ஒட்டிய அவர் பாதங்கள், வெகு வேகமாக ஆற்றில் இறங்கும் சந்திலிருந்து ராஜபாட்டையில் திரும்பி, மறுபடியும் ஒற்றைத் தெரு என்ற சந்தில் நுழைவதைக் காணலாம். மழையானாலும், பனியானாலும் ஈர வேஷ்டியைச் சற்று உயர்த்திய கைகளால் பின்புறம் பறக்கவிட்டுக் கொண்டு, உலர்ந்தும் உலராத நெற்றியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் விபூதி, குங்குமம், சந்தனம் விகசிக்க, அவர் செல்லும் காட்சியைச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகக் கண்டவர்களுக்கு, அவர் பக்தியைப் பற்றி அவ்வளவாகக் கவலை ஏற்படாவிட்டாலும், நன்றாக முடுக்கி விடப்பட்ட பழுது படாத யந்திரம் ஒன்று நினை விற்கு வரும். தலையைச் நோக்கி ஆறு மணி யாகிவிட்டால், நேற்றுத் துவைத்து உலர்த்திய வேஷ்டியும் துண்டுமாக. ஈரத் சிக்கெடுத்த வண்ணம் ஸ்டோர் கிடையை நடப்பார். மறுபடியும் அவர் இரவு பத்து அல்லது பன்னிரண்டு மணிக்குக்கடையைப் பூட்டிக்கொண்டு திரும்பு வதைப் பார்க்கலாம். 'மீனாச்சி கணக்குப்பிள்ளை அந்தஸ்தை எட்டு வதற்கு முன்பே, நாலைந்து குழந்தை - மீனாட்சிகள் தெருவில் புழுதிரக ஆராய்ச்சியில் ஈடுபடுவது சாதாரணமாகிவிட்டது. - சர்வ பிள்ளையவர்கள் பொறுமைசாலி - ஆதிசேஷன் ஒரு பூமியின் பாரத்தைத்தான் தாங்குகிறானாம்; பொறுப்பு, ஏமாற்று, சுயமரியாதை, நம்பிக்கை 10 ஆனால் என்ற