பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

150 புதுமைப்பித்தன் கதைகள் . நியதியற்றுச் சுழலும் ஒரு பெரிய கிரக மண்டலத்தையே தூக்கிச் சுமக்கிறார் அவர். ஏறு நெற்றி, வழுக்கைத் தலை, கூன் முதுகு, பெட்டியடியில் உட்கார்ந்து உட்கார்ந்து குடமான வயிறு - இவைதான் இச்சுமைதாங்கி யோகத்தால் ஏற்பட்ட பலன்கள். உத்தி ' பிள்ளையவர்கள் மிகவும் சாது; அதாவது, படா டோபம் மிடுக்கு, செல்வம், அகம்பாவம் முதலியவற்றின் உதைகளையும் குத்துக்களையும் ஏற்று ஏற்று, மனமும் செயலும், எதிர்க்கும் சக்தியையும், தன்னம்பிக்கையையும் அறவே இழந்துவிட்டன. தாம் கீழ்ப்பட்டவர், விநயமாக இருக்க வேண்டும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள உண்மை நாணயம் முதலிய பழக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்று உறுதிப்பட்டவர். ஆனால் அவர் உள் த்தில், அந்தப் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கும் உள்ளத்தில், அல்லாவுத்தீன் ஜீனியைபோல், ஆசை பூதா காரமாய் விரிந்து, அவரது சித்தப் பிரபஞ்சத்தையே கவித்து ஆக்கிரமித்துக் கொண்டது. தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் செயல் திறமை யிழந்தவன் செய்வது போல், ஆசைப் பேய்க்குப் பூசையும் பலியும் கொடுத்து மகா யக்ஞம் செய்ய எந்தப் பக்தனாலும் முடியாது. இந்த மனம் இருக்கிறதே, அப்பா? ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கும் அது உண்டு. நீறு பூத்த நெருப்பை வேதாந்திகள் பெரிய விஷயங்களுக்கு உபமானம் சொல்லுவார்கள். ஆசையைப் பொறுத்த வரை அந்த உபமானத்தால் பிள்ளை பெரிய மனுஷர் தான் மீனாச்சியா! அந்த அப்பாவிப் பயல்!" என்று பலர் துச்சமாகக் கருதுவார்கள். முகத்திற் கெதிரேயும் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட அப்பாவிப் பிராணி யின் மனத்தில் புகைந்து கவிகிறது ஆசை. வீட்டில் குழந்தைக்குப் பால் தட்டாமலிருக்க.- ஏன், பால் விற்று காசும் சம்பாதிக்க -- மாடும் கன்றும் வாங்க வேண்டும்! தெற்குத் தெரு மாவன்னாவுக்கு 'மேடோவர் செய்த நிலத்தைத் திருப்பவேண்டும். இது மட்டுமா? கால் மேல் கால் போட்டு. ஏ மீனாச்சி!' என்று தாம் நாலு