பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

மனித யந்திரம் 151 அழைக்கப்படுவது போல், தம் இஷ்டப்படி ஆட ஒரு னாட்சியும் ஸ்டோர் கடையும் கைக்குள் வரவேண்டும். ஒரு முறை கொழும்புக்குப் போய்விட்டுத் தங்க அரை ஞாண், கடிகாரச் சங்கிலி, வாட்ட சாட்டமான உடம்பு, கையில் நல்ல ரொக்கம், கொழும்புப் பிள்ளை என்ற பட்டம் முதலிய சகல வைபவங்களுடனும் திரும்ப வேண்டும். தெருவில் எதிரே வருகிறவர் எல்லாரும், துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, பல்லை இளித்த வண்ணம் அண்ணாச்சி சௌக்கியமா? என்று கேட்க வேண்டும்! ஊரில் நடைபெறும் கவியாணமும், சம்பவிக்கும் இழவும் இவர் வருகையை எதிர்பார்த்துத்தான் பாதையில் செல்லவேண்டும்!...... . தம் இன்னும் எத்தனையோ எண்ணங்கள் தினசரிப் பணப்பழக்கம் எல்லாம் அவர் கையில்தான். கடைசியாய், தனியாகக் கடையைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு போகிறவரும் அவர்தான். அதே சமயத்தில்தான், கடைக் குக் கூப்பிடுகிற தூரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷ னில் ஐந்து நிமிஷம் நின்றுவிட்டுத் தூத்துக்குடி ஷட்டில் வண்டி புறப்படுகிறது. டிக்கட் வாங்கிக்கொண்டு ராத்திரி யோடு ராத்திரியாகக் கம்பி நீட்டிவிடலாம். டிக்கட்டுக்கு மட்டிலும் பணம் எடுக்கத் தினசரி கடையில் பணம் புர ளும். ஆனால், அந்தப் போலீஸ்காரப் பயல் இருக்கிறானே! நினைக்கும் பொழுதே பிள்ளையவர்களுக்கு அவன் தோளில் விழுவதுபோலப் பயம் தட்டிவிடும். திடுக்கிட்டுத் திரும்பிக்கூடப் பார்த்துவிடுவார். கை சிலர் நேரத்தைத் தெரிந்துகொள்ளக் கைக் கடிகாரம் கட்டிக்கொள்ளுவார்கள். வேறு சிலர் நிழலின் குறியை உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். கடிகாரத்தின் மெயின் ஸ்பிரிங் ஒடிவதற்கு ஹேது உண்டு. சூரியனை மேகம் மறைத்தால் நிழலின் குறியெல்லாம் அந்தரடித்துக் கொண்டு போகவேண்டியதுதான். அதனால்தானோ னவோ, சென்ற நாற்பத்தைநது வருஷங்களாகக் கொக்கிர குளத்திலுள்ள பலருக்கும் ஸ்ரீமான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. சாவி கொடுக்காத கடிகாரமாய் மேகத்தால் மறை யாத சூரியனாய், என்றும் பழுதுபடாத நித்திய வஸ்துவாய் இருந்து வருகிறார். என்