பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

152 புதுமைப்பித்தன் கதைகள் யெல்லாம் - பிள்ளைக்கு எதிலும் நிதானம். இயற்கையின் நியதி யைப்போல் இருக்கும் அவர் நடவடிக்கை நேற்று இருந்த மாதிரிதான் இன்றும்,நாளையும்,இனியும். ஒன்றுமட்டும் சொல்லுகிறேன். கொக்கிரகுளத்தில் உள்ள மிகவும் முதிர்ந்த கிழவருக்கும், அவர் தம் சன்னக் கம்பிக் கறுப்புக் கரை நாட்டு வேஷ்டியுடன் தான் காட்சியளித்து வருகிறார். இந்த ஒழுங்கிலிருந்து அவர் விலகியதும் கிடை யாது; விலக முயன்றதும், விரும்பியதும் கிடையாது. ஒரு ஸ்ரீ பிள்ளையவர்களின் முகம் தேஜஸ் கீஜஸ் என்ற பெறாவிட்டாலும், அவர் தொந்தரவெல்லாம் சித்தாந்தி. பற்று வரவு கணக்கு அவருக்கு வாழ்க்கையின் இரகசியங்களை எடுத்துக் காண்பித்து ; புகையூடு தெரியும் விளக்கைப் போன்ற ஒரு மங்கிய சித்தாந்தத்தை உப தேசித்தது. II மூலைத் தெரு லாந்தல் கம்பங்கூடச் சோர்ந்துவிட் டது. கொக்கிர குளத்திலுள்ள லாந்தல் கம்பங்களுக்கு இரவு பத்து மணிக்குள்ளாகவே சர்வ சாதாரணமாக ஏற் படும் வியாதி இது. மூலைத் தெருவில் மற்ற இடங்க ளெல்லாம் ஓடுங்கி விட்டன. ஸ்டோரில் பெட்டியடி மேல் ஒற்றை மின்சார விளக்குப் பிரகாசிக்கிறது. பிள்ளையவர்கள் ஓலைப் பாயில் உட்கார்ந்துகொண்டு மேஜையின் மேலுள்ள சிட்டைப் புத்தகத்தில் ஏதோ பதிந்துகொண்டு இருக்கிறார். "சுப்புப் பிள்ளையா? நாலு. நாலரை, நாலரையே மாகாணி, நாலரையேமாகாணியும் ஒருசல்லியும், நாலரையே மாகாணி ஒரு சல்லி, ஒரு துட்டு, நாலு, ஒம்பது, அஞ்சு சல்லி!... சவத்துப் பயலுக்குக் குடுத்துக் குடுத்துக்கட்டுமா? நாளைக்கு வரட்டும் சொல்லறேன். கோவாலய்யா? சொல்ல வும் முடியாது, மெல்லவும் முடியாது! என்ன செய்யறது? பிள்ளையவாள் பாடு அவன் பாடு...... ஏடுகளைப் புரட்டு கிறார். நெற்றியில் வழியும் வேர்வையைத் துடைத்துவிட்டு,