பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

154 புதுமைப்பித்தன் கதைகள் பெட்டியின்மேல் ஊன்றியபடி மெதுவாகச் சம்மணமிட்டு உட்கார்ந்தார். மாவடியா பிள்ளை புறப்படுவதாகத் தோன்றவில்லை. "என்ன அண்ணாச்சி, இன்ன தேரமாகலியா!> என்று, பெட்டியடிப் பக்கத்தில் இருந்த தட்டில் உள்ள பொரி கடலையை எடுத்துக் கொரிக்க ஆரம்பித்தார். தான் "இன்னம் ரெண்டு மூணு புள்ளியைப்பார்த்துவிட்டுத் கடையெடுக்கணும். எனக்குச் + செல்லும் வார வைகாசிலே ராதாவரத்துப்பிள்ளை என்னமோ காசுக்கடை வைக்ராஹளாமே ஓங்கிளுக் கென்னய்யா!"என் று சிரித்தார் பிள்ளை அவாளுக்கென்ன! காசுக்கடையும் வைப்பா ஹ கும்பி னிக் கடையும் வைப்பாஹ.கையிலே பசையிருந்தா யார் தான் என்னதான் செய்யமாட்டா ஹ? வார வைகா சிலையா? யார் சொன்னா?" என்று வாயில் உப்புக் கடலை ஒன்றை எடுத்துப் போட்டபடியே கேட்டார். "என்னய்யா. ஒரே யடியா கையை விரிக்கிய? ஓங்க ளுக்குத் தெரியாமலா பிள்ளைவாள் வீட்லே ஒண்ணு நடக் கும்? யாருகிட்ட உங்க மூட்டையை அவுக்கிய?" என்று, கையில் எடுத்த பென்ஸில் முனை மழுங்கியிருந்ததால். நகத்தால் கட்டையை உரித்துக்கொண்டே சொன்னார். + மாவடியா பிள்ளை அப்படி இலகுவில் 'மூட்டையை அவிழ்த்து விடுபவரல்லர். 'ஊர்க் கதை எல்லாம் நமக் கெதுக்கு? நான் வாரேன். தேரமாகுது!" என்று எண் ணெயை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார். "தம்பி! விசாளக்கௌமையை மறக்காமே!" என்றார் பிள்ளை. . 'மறப்பனா!" என்றுகொண்டே இருட்டில் மறைந்தார் மாவடியா பிள்ளை. பிள்ளையவர்களுக்கு அப்புறம் கணக்கில் மனம் லயிக்க வில்லை. ராதாபுரத்துப் பிள்ளை ஆரம்பிக்கப்போகும் காசுக்

  • தேரம்- நேரம்.

செல்லும் - நேரம் செல்லும்.