பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

மனித யந்திரம் 158 நினைக்க கடையிலும், அதில் மாவடியா பிள்ளைக்குக் கிடைக்கக் கூடிய ஸ்தானத்தையும் பற்றி விஸ்தாரமாக ஆரம்பித்துவிட்டார். "மாவடியா பிள்ளைக்கென்ன! கையிலே பணம்புரண்ட வண்ணந்தான். இப்பவே ஒரே யடியாக முழுங்கரானே. ஆளைக் கையிலே பிடிக்க முடியுமா?....." அவர் மனம் காசுக்கடைப்பெட்டி யடியில் உட்கார்ந்தி ருக்கும் கற்பனை - மாவடியாபிள்ளையைக்கண்டு பொறாமைப் பட்டது. என்னதான் இருந்தாலும் நாணயமா ஒரு இடத்தில் இருக்கிறவன் என்று பேர் வாங்கப் போறானா நாற்பத்தைந்து வருஷங்கள் ஒரே இடத்தில் இருந்து பேர் வாங்கினால் அல்லவா தெரியும்?... உடனே மனம் நாற்பத் தைந்து வருஷங்களையும் தாவி,ஏதோ அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்திற்குப்போக மறுத்ததினால் ஏற்பட்ட இந்த மாறுதலை நினைத்தது. அந்தக் காலத்தில் அது பிரமாத மாகப் படவில்லை. அப்புறம் பிள்ளையும் குட்டியும் வந்து. அது இது என்று ஆக ஆகச் சந்தர்ப்பம் தவறாக மாறிப் பெரிய தவறாக உருவெடுத்தது. வக்கீல் பிள்ளையும் உடன் படித்தவர்தான். இப்பொழுது அவரை "ஏலே ஆறுமுகம்!" என்று கூப்பிட முடியுமா? பிள்ளையவர்களுக்கு மனம் கணக்கில் லயிக்கவில்லை. பெட்டியில் மூடிவைத்தார். "தூத்துக்குடி வண்டி இன்னும் புறப்படவில்லையே!" என்ற எண்ணம் திடீரென்று உதித் தது. "சவத்தைக் கட்டி எத்தனை நாள் தான் மாரடிப்பது!" என்று முணு முணுத்தார். நெற்றியில் குபீர் என்று வியர்வை யெழும்பியது. பெட்டிச் சொருகை அனாவசிய பலத்தை உபயோகித்து வெளியே இழுத்தார். உள்ளே யிருந்த சில்லறையும் ரூபாயும் குலுங்கிச் சிதறின. செம்பு. நிக்கல், வெள்ளி என்று பாராமல் மடமடவென்று எண்ணினார். நாற்பதும் சில்லறையும் இருந்தது. அவசர அவசரமாக எடுத்து மடியில் கொட்டிக்கொண்டு. விளக்கை அணைத்து, மடக்குக் கதவுகளைப் பூட்டினார். சாவிக்கொத்து கையில் இருக்கிறது. உணர்வுகூட இல்லாமல் வேகமாக ஸ்டேஷனை நோக்கி நடந்தார். காற்பத்