பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

158 புதுமைப்பித்தன் கதைகள் ரயில் விஸில் கிரீச்சிட்டது. பிள்ளையவர்கள் அவசர அவசரமாகக் கதவுப் பக்கம் வந்து இறங்கினார். பிளாட்பாரத்தில் கால் வைத்ததுதான் தாமதம், வண்டி நகர ஆரம்பித்தது. "என்ன பிள்ளைவாள் இறங்கிட்டிய!" என்று வேகம் அதிகரித்து ஓடும் ரயில் சாளரத்திலிருந்து ஒரு குரல். கலியாணசுந்தரம் பிள்ளை தான். அவாள் வரலை" என்று கத்தினார் பிள்ளை. மெதுவாக, நிதானமாக ஸ்டேஷனை விட்டு வெளியேறி ஸ்டோர் பக்கமாக நடந்தார் பிள்ளை. வழியில் சிறிது தூரம் செல்லுகையில்தான் பாஸ் இல்லாமல் எப்படிக் கப்பலில் செல்வது என்ற ஞாபகம் வந்தது பிள்ளைக்கு. 'புத்தியைச் செருப்பால்தான் அடிக்கணும்/" என்று. சொல்லிக்கொண்டார் பிள்ளை. அவருக்குத தமது ஆபத் தான நிலைமை அப்பொழுதுதான் தெளிவாயிற்று. உடல் நடுங்கியது. யார் செய்த புண்ணியமோ!" என்று மடியில் இருந்த விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டு, "மகாதேவா!" என்றார் வாய்விட்டு. ஸ்டோருக்கு வந்துவிட்டார். சாவதானமாகக் கதவைத் திறந்து, விளக்கை ஏற்றினார். மடியில் இருந்த சில்லறை யைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, சிட்டையை எடுத்து. "மீனாட்சி பற்று பதினொன்றேகாலணா" என்று எழுதினார். மறுபடியும் விளக்கு அணைந்தது, காலில் செருப்பை மாட்டிக் கொள்ளும் சப்தம்; பூட்டு கிளிக் என்றது. முதலாளி வீட்டை நோக்கி சருக் சருக்'கென்ற செருப்புச் சப்தம். பிள்ளை வழியில் துண்டை உதறிப் போட்டுக் கொண் டார். தலையை உதறிச் சொருகிக் கொண்டார். முதலாளி காற்றுக்காக வெளியே விசுப் பலகையில் தூங்குகிறார்.