பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

16 புதுமைப்பித்தன் கதைகள் கொடுத்தது. ஸ்டோர் மானேஜர் கண்ணப்ப நாயனார் ரகத்தைச் சேர்ந்த பேர்வழி. தனது இஷ்ட தெய்வத்திற் குத் தான் ருசித்துப் பார்த்துத்தான் சமர்ப்பிப்பார். தற் செயலாக வருவதுபோல் திரு. பாட்ரிக்ஸன் ஸ்மித் அவர்களை அழைத்து வந்தார். ஸ்மித்தினுடைய ரசனையும் அவ்வளவு மட்டமானதன்று. மருதியும் குழந்தையுடன் பங்களாவின் பக்கத்தில் தோட்டக்காரியாக வசிக்க ஆரம்பித்தாள். இப்படி இரண்டு வருஷம் சென்றது. IV ஸர் ஜோஸப் பிட்ஜ்மார்ட்டின் கிரௌனின் மூன்றா வது தலைமுறைக்கு முன்பு, குடும்ப கௌரவத்தை ஸ்தா பித்த ஸர் ரெட்மன்ட் கிரெளன், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தின் அஸ்திவாரத்திற்குக் காரணமான அசல் பிரிட்டிஷ் குணத்தைப் பெற்றவர். அவர் ஏதோ ஒரு பெயர் தெரியாத பாங்கியில் குமாஸ்தாவாக இருந்த தகப்பனாரை அடிக்கடி தொந்தரவு செய்து, குடும்பத்தில் காலாடி என்ற பட்டப் பெயருடன் கப்பலேறி, இலங்கைத் தேயிலையில் பட்டமும் பணமும் சேகரித்து, ஒரு பிரபுவின் குடும்பத்தில் கவியாணம் செய்துகொண்டவர். ஸர் அந்த மூன்றாவது தலைமுறையின் குடும்ப இலட்சியத் தின் சகவ குணங்களையும். துணிச்சலையும், ஜோஸப்பின் ஏக புத்திரியான மாட் கிரௌன் பெற்றிருந் தாள். இங்கிலீஷ் மோஸ்தர்படி அவள் அழகு ஆட்களை மயக்கி யடிக்கக்கூடியது. அவர்கள் 'ஸெட்'டில் அவள் செய்யாத அட்டகாசம் கிடையாது. திடீரென்று அவளுக்கு ஆகாய விமானத்தின் வழியாக உலகத்தை ஒரு சுற்றுச் சுற்றி வரவேண்டும் என்று பட்டது. பிறகு என்ன? புறப்பட்ட பத்தாம் நாள் இலங்கையில் விமானத்தின் கோளாறினால் இறங்கவேண்டியதாயிற்று. திரு. பாட்ரிக்ஸன் ஸ்மித்திற்கு ஒரு தந்தி பறந்தது. அவர் தமது மோட்டாரை எடுத்துக்கொண்டு கொழும்புக்