பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

162 புதுமைப்பித்தன் கதைகள் "நன்றா யிருக்கிறதா?

  • 4

பிறகு...அவன் சிறு பையன். சத்தியாக்கிரகி! வயிற்றில்.. தடிக்கம்புக் குத்து. அவனுக்கும் வைத்தியம் நடந்தது.பாவி எமனும் அவனைப் பார்த்துத்தான் அன்ன நடை நடக்கிறான் ! பையனுக்குச் சாவின்மேல் எவ்வளவு ஆசை ! நெஞ்சில் குண்டுபடவில்லையே என்ற பெரிய ஏக்கம். அதே புலம்பல்தான். என் கையில் ஒரு துப்பாக்கி இருந்தால்......சாவைக் கண்டதும் என்ன உற்சாகம்! காதலியைக் கண்டதுபோலத்தான் என்னமோ. "ஸுஜ லாம். ஸுபலாம். என்று ஆரம்பித்தான். குரல் வளையில் கொர்ர் என்றது. பிறகு என்ன? அவன் தாயாராம், ஒரு விதவை; என்ன அழுகை அழுதாள் !-கருமஞ் செய்யத் தனக்கு ஆள் இல்லை என்றோ! 56 66 "ஹி! ஹி!! ஹி!!! இன்னும் ஒன்று சொல்லுகிறேன். கேள்.... 'ரத்தபேதி கேஸ். அவன் ஒரு மில் கூலி. அப் பொழுது 'ஸீஸன்' டல். என் மேல்தான் கொண்டுவந்து கிடத்தினர்.கூட நஞ்சானும் குஞ்சானுமாக எத்தனை உருப்படி!இத்தனைக்குமேல் இவனுடைய ஆயா ஒரு கிழவி. டாக்டர் வந்தார். வந்துவிட்டதையா கோபம்! கழுதையை இழுத்துக் கீழே போடு!' என்று கத்தினார். நானா விடுகிறவன்? ஒரே அமுக்கு அமுக்கு ஆளை 'க்ளோஸ்' பண்ணித்தான் விட்டேன்! 'வேறுஎன்ன! 'நான் யார் தெரியுமா? சூ! கோழை, பயப்படாதே! நான் ஒரு போல்ஷிவிக்கி (அபேதவாதி) 46 "ஹி! ஹி! ஹி!........ an! ....." 1 மறுபடியும் அந்தக் கோரமான கம்பிப்-பல் சிரிப்பு! யாரோ என்னை எழுப்பினார்கள். "ஏன் முனங்குகிறாய்? தூக்கம் வரும்படி மருந்து என் என்றாள் மேல் குனிந்துகொண்டிருந்த தரவா?" நர்ஸ். எங்கோ டக், டக், டக் என்ற பூட்ஸ் சப்தம். டாக்டரோ?