பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

கனவுப் பெண் ராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலை யும் தாண்டி, வெற்றிப் புலிக்கொடியைப் புதிய தேசங் களில் நாட்டிப் பெருமிதமாக வளர்ந்தது. இந்து சீனத்திலே தமிழனின் கலை. தமிழனின் வீரம். தமிழனின் கீர்த்தி எல்லாவற்றையும் நிலைநாட்டி.. அதெல்லாம் பழைய கதை. மார்த்தாண்டன், தான் இருந்த தலைநகர் இப்பொழுது பெயர் தெரியாமல் இருக் கும் என்று கண்டானா? சோழனுடைய தலைநகர் உறையூர். யவன வீரர்கள் இந்து - சீனப் போரில் அவன் படையிலே தங்கள் இரத் தத்தைச் சிந்தினார்கள்; அவன் அரண்மனைத் தலைவாயிலைக் காத்திருந்தார்கள். அகழிக் கப்புறம், அண்ணாந்து பார்த்தால் தலை யறுந்து விழுந்துவிடும்படி பெரியவாயில். உள்ளே சற்றுத் தள்ளி வெண்கலத்தினால் ஆன துவஜஸ்தம்பம். அதன் உச்சியில் முன்னங்கால்களை உயரத் தூக்கிக்கொண்டு. வாயைப் பிளந்த வண்ணம், பாயும் நிலையில் வார்த்த ஒரு வெண்கலப்புலி; முழுதும் தங்க முலாம் பூசப்பட்டிருக் கிறது. அதன் கண்களுக்கு இரண்டு பெரிய இரத்தினங் கள்! சூரியனுடைய கிரணங்கள், அதன் மிடுக்கை - சாம் ராஜ்யத்தின் மனப்பான்மையை தன்னையே வென்று கிழிக்க முயலுவதைப் போல் நிற்கும் புலியை - அந்தச் சிற்பியின் கைவன்மையை - எடுத்துக் காட்டின.