பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

164 புதுமைப்பித்தன் கதைகள் ஸ்தம்பத்தின் அடியில் குறுகிய கவசம் அணிந்து. கச்சையைப் போல் வேஷ்டியை இறுக்கிக் கட்டிய மறவர் கள் கையில் எறி ஈட்டிகளை ஏந்திய வண்ணம், கல்லாய்ச் சமைந்தவர் போல்காத்து நிற்கிறார்கள். - . சற்று உள்ளே ராஜமாளிகை, கல்லில் சமைந்து, தமி ழனின் மிடுக்கை, தமிழனின் வீரத்தை, தமிழனின் இலட்சி யத்தை ஒருங்கே எடுத்துக் காட்டுகிறது. எங்கு பார்த்தா லும் ஏகாதிபத்தியச் செருக்கு. சாம்ராஜ்யத்தின் ஹ்ருதய மின்மை அழகுருவத்தில் மனிதனை மலைக்க வைக்கிறது. மிருகத்தன்மை - அதற்கு வீரம் என்று மரியாதையாகச் சொல்லுவார்கள் - அழகுடன் கைகோத்து உலாவுகிறது. உள்ளிருந்து சங்கமும் முரசும் ஏகமாக முழங்குகின் றன். "ராஜ ராஜ அரிகேசரி வர்மன் பராக்...... இன்னும் எத்தனையோ முழ நீளம் முடிவில்லாமல் செல்லுகிறது அவன் பெயர்! முன்பு சிற்றரசர்கள், தானாதிபதிகள் தளகர்த்தர் கள் - யாரும் படிப்படியாக முறை முறை வந்து வழி விட்டு விலகி நின்று அடிபணிகிறார்கள். எங்கிருந்தோ மங்கள வாத்தியம் முழங்குகிறது. உள்ளிருந்து ஒரு யௌவன புருஷன் - ஆணின் இலட்சியம் - வருகிறான். நெஞ்சிலே வைரங்கள் பதித்த குறுகிய கவசம் - மத்தியில் ரத்தினங்களில் புலி - காலில் வீரக் கழல், சிரத்திலே மரகதக் கிரீடம், இடையில் ஒரு சுரிகை. - அகன்று சுழன்று நேர் நோக்கும் வசீகரக் கண்கள். புருவத்தின் அழகை எடுத்துக் காட்டுவது போன்ற நெற்றி அகன்ற நெற்றியிவிட்டிருக்கும் கருஞ் சாந்தின் அழகை மங்கவைத்து எடுத்துக் காட்டும் அந்தக் கண் களில் கனிவு, சிற்சில சமயம் மிடுக்கு.....! மெதுவாக அசைந்தசைந்து உலகம் பெயர்வதுபோல் நிகரற்ற நடை. பக்கத்தில் வரும் ஒருவனுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு வருகிறான்.