பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

4 கனவுப் பெண் 165 இருவரையும் பக்கத்தில் பக்கத்தில் பார்ப்பதிலே. மனித இலட்சியங்கள் இரண்டையும் காணலாம். ஒன்று மனிதனின் சக்தி: மற்றது மனிதனின் கனவு. அவனும் அழகன்தான்; அழகும் தெய்வீகமானது. இந்தப் படாடோபத்துக்குச் சமமாக மதிக்கும் கண்களிலே கனவுகள். இலட்சியங்கள். உருவப்படுத்த முடியாத எண் ணங்கள் ஓடி மறையும் கண்கள். அவனுடைய இடையி லும் ஒரு சுரிகையிருக்கிறது. சம்பிரதாயமாக, வழக்கமாக இருக்கும் போலும்/ அக பக்கத்தில் பணிப் பெண்கள்.... அழகின் பரி பூரணக் கிருபையாலே, அரச படாடோபத்தின் உயிருடன் உலாவும் சித்திரங்கள். மார்பில் கலை கிடையாது. காலத்தில் அரசன் முன் அப்படி நிற்கமுடியுமா? முத்து வடங்கள் அவர்கள் தாய்க்கோலத்தை மறைக்கின்றன. இடையில் துல்லிய தூய வெள்ளைக் கலிங்கம். அரசனுக்கு அடைப்பத் தொழில் செய்தலும், சாமரை வீசுவதும் அவர்களுக் குரியவை. அரசனுக்கு நடக்கும் மரியாதை அந்த அழகனுக்கும் நடக்கின்றது.

வெளியே வந்தாகிவிட்டது. காவிரிப்பூம் பட்டினத்தில் நாவாயேறி இந்து - சீனத் திற்குச் செல்கிறான்,- அந்தப் பெயர் தெரியாத பிர தேசங்களில் தமிழ் இரத்தத்தைத் தெளித்து வெற்றிக் கொடிகளைப் பயிராக்க, பட்டத்து யானையில் ஏறியாகிவிட் டது -- கவிஞனுடன் ...... நல்ல நிலா ... II நடுக்கடல்.. .எங்கு திரங்கள் பார்த்தாலும் நீல வான், நீலக் கடல்.நாவாய் கீழ்த் திசை நோக்கிச் செல்கிறது. அதன் மேல் தட்டில் கவிஞனும் சோழனும்... 11