பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

166 புதுமைப்பித்தன் கதைகள் கட கவிஞனுக்கு அன்று உற்சாகம். ஊர்வசியின் னத்தை, அவள் அழகை ஓர் அற்புதமான கவியாகப் பாடு கிறான். ஊர்வசி அரசனைக் காதலிகிக்கிறாளாம். அரசனைக் காண வருகிறாளாம். கவியின் கற்பனை அரசன் உள்ளத்தைத் தொட்டது. கவிஞன் கனவில்தான் கண்டான். அரசன் முன்பு ஊர் வசியே தோன்றிவிட்டாள்! வெறுங் கனவு! சோழனுக்குமா அப்படி? ஊர்வசீ! ஊர்வசீ! அதோ வருகிறாளே! அதோ, அந்த அலையின் மேல்! அதோ! அதோ! ஊர்வசி" கவிஞன் அரசனை யழைக்கிறான். 'ஊர்வசி' என்ற பதில்தான். அரசன் கட்டளைப்படி, கடலில் தறிகெட்டுத் தேட ஆரம்பிக்கின்றது நாவாய். "அதோ அந்த மறைத்துவிட்டது... அவளே ஊர்வசி..!" அலைமீது...அந்தப் பெரிய அல் அதோ தெரிகிறாள்!. அந்தப் பெரிய அலையின் கீழே பாறைகள் யாருக்குத் தெரியும்?.. என்று கடகட வென்ற சப்தம்! உள்ளே ஜலம் வெண்மை யாகப் பாய்கிறது. ஊர்வசி!" என்றகுரல் சோழன் இருக்கும் திசையைக் காட்டுகிறது. அந்த அமளியில் படைத்தலைவன் நெருங்கு கிறான். அதற்காகக் கப்பல் இன்னொரு பாறை! பொறுத்துக்கொண்டிருக்குமா? கப்பலில் உச்சி முதல் அடிவரை ஒரு நடுக்கம். பாய் மரம் தடால் என்று ஒடிந்து விழுகிறது?